சென்னை பல்கலைக்கழகத்தில் இனி M.Phil பட்டபடிப்புகளில் மாணவர் சேர்க்கை கிடையாது..!!
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழகத் துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், இணைப்பு மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் M.Phil பட்டப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
சென்னை காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!
ஏற்கனவே M.Phil பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தங்களுடைய படிப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2021 22 ஆம் கல்வியாண்டில் இருந்து M.Phil பட்டபடிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் நடைமுறைகளின் படி, இனி M.Phil படிப்பு கிடையாது . பொறியியல் படிப்பில் ஓராண்டு விடுமுறை எடுத்தபின் கூட மாணவர்களின் மீண்டும் படிப்பை தொடரலாம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது