சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை:விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்..!!
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெறவுள்ளதாக கடந்த APRIL 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள
- அலுவலக உதவியாளர் 1911,
- அலுவலக உதவியாளர் மற்றும் முழு நேர காவலர்- 1,
- நகல் பிரிவு அலுவலர் – 3 ,
- சுகாதார பணியாளர் – 110 ,
- தூய்மைப் பணியாளர் -6 ,
- தூய்மைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் -17 ,
- தூய்மைப் பணியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் -1 ,
- தோட்டக்காரர் -28 ,
- காவலர் -496 ,
- இரவு காவலர் – 185
உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 3,800-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள், மாத சம்பளம் ரூ.15,700 – 50,000 (தரநிலை I ) என அறிவிப்பு வெளியானது.
JUNE 6 ஆம் தேதி விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ONLINE மூலம் விண்ணப்பிக்க 09.07.2021 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்
இந்த செய்தியையும் படிங்க…