சென்னையில் தீவிரம்-இந்த வயதுக்காரர்களை குறிக்கும் வைக்கும் கொரோனா:மாநகராட்சியின் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் சென்னையில் இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 599 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் 31 ஆயிரத்து 535 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 797 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க….
வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வோருக்கு- டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள்..!!
சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 4567 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 69 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம்,திருவிக நகர், அம்பத்தூர் ,கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட மண்டலங்களில் பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 3,198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அண்ணாநகரில் 3,184 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.97 சதவீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 6.24 சதவீதமும், 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 19.78 சதவீதமும், 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் 21.91 சதவீதமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க….
18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரடியாக சென்றால்- தடுப்பூசி கிடைக்காது: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்..!!