சுரைக்காய் -நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட சுரைக்காய்..!!
சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன.
சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி காய் ஆகும். சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது.
சுரைக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்டது. மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.
வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள், மலச்சிக்கல் போன்றவை தீரும்.
குறிப்பாக மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக இருக்கிறது.
உடல் சூடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீர்கத்தில் கல் இருத்தல் போன்றவற்றிற்கு சுரைக்காயினைவிட சிறந்த தீர்வு.
சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்க சுரைக்காயினை வாரத்தில் 2 முறை என்ற அளவில் கட்டாயம் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
சுரைக்காயில் உள்ள அதிக அளவு நீர்ச் சத்தானது உடலில் கொழுப்பினை சேர்க்கவிடாமல் இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனை உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சுரைக்காயினை கட்டாயம் தினசரி ஏதாவது ஒரு வகையில் எடுத்துக் கொண்டால் உடல் எடை மளமளவென குறையும்.
மேலும் இது சிறுநீர்ப் பெருக்கத்தை அதிகரித்து கெட்ட நீரையும் உடலில் இருந்து வெளியேற்றுகின்றது,
மேலும் சுரைக்காய் செரிமானப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.