"சுனாமி போல சீறி வரும் கொரோனா இரண்டாம் அலை". உஷார் மக்களே! - Tamil Crowd (Health Care)

“சுனாமி போல சீறி வரும் கொரோனா இரண்டாம் அலை”. உஷார் மக்களே!

 “சுனாமி போல சீறி வரும் கொரோனா இரண்டாம் அலை”. உஷார் மக்களே!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காட்டுத்தீயாய் பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக நாளொன்றுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த செய்தியையும் படிங்க…

மே 2-ல் தேர்தல் பணியில் இருப்போருக்கு கட்டுப்பாடுகள் இல்லை”- தமிழக அரசு.!! 

குறிப்பாக சென்னையில் மட்டுமே 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகிறது. கடந்த ஆண்டைப் போல, தலைநகர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்குமோ என்ற பீதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள் எல்லாம் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். தொழில் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்த படியே பணியாற்ற அறிவுறுத்தி வருகின்றன. இதனிடையில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் சென்னையில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர அதிரடி நடவடிக்கையை அமல்படுத்தி வருகின்றன. 

தற்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மக்கள் நுழையாத வண்ணம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் கொரோனா வைரஸ் சுனாமி போல் அதிவேகமாக பரவி வருகிறது. முதல் அலை சிறிய அளவிலேயே இருந்தது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

இந்த செய்தியையும் படிங்க…

கொரோனா பாதுகாப்பு காரணங்களால், -தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு..!! 

சென்னையில் 25 ஆயிரம் பேர் அவரவர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பதற்றமடைய வேண்டாம். ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மக்களின் முழு ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment