சீயக்காயின்: அற்புத நன்மைகள்..!!
சிகைக்காய் முடிக்கு எவ்வாறு உதவுகிறது? இதை தலைக்கு தேய்த்து குளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இந்த செய்தியையும் படிங்க…
நடைப்பயிற்சி(Walking): ஏற்படும் ஏராளமான நன்மைகள் !!
- இயற்கையாக கிடைக்கும் சிகைக்காய் உங்கள் தலைமுடியை மென்மையாக்கி அழகான மிருதுவான தோற்றத்தை வழங்கும்.
- சிகைக்காயின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டது என்பதால் உங்கள் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சியைத் தடுக்கும். தவறாமல் பயன்படுத்தினால் பொடுகுப் பிரச்சினையைக் குணப்படுத்த உதவும்.
- சிகைக்காய் முடி வேர்களை பலப்படுத்துகிறது. இதன் விளைவாக வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி கிடைக்கும். அதோடு முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.
- எண்ணெய் தேய்த்துக்கொண்டு கழுவாமல் இருக்கும் உச்சந்தலையில் சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் உச்சந்தலைக்கு போஷாக்கு கிடைக்கும். தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
- சிகைக்காய் தேய்த்து குளிப்பதால் இளமைப் பருவத்திலேயே நரை முடி தொல்லை இருக்காது. இது உங்கள் தலைமுடியின் இயல்பான இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
- பேன் தொல்லை இருந்தால், சிகைக்காய் தேய்த்து குளித்தால் குணமாகும்.
- தலை அரிப்பினால் தேய்த்து தேய்த்து தலையில் சிறு சிறு காயங்கள் ஆகியிருந்தால் சிகைக்காய் தேய்த்து குளிக்கும்போது நாளடைவில் அந்த பிரச்சினை குணமடையும்.
- ஒரு சிகைக்காய் ஹேர் பேக் ஒரு சூடான நாளில் நிவாரணம் அளிக்கலாம், தலைவலியைப் போக்கலாம் அல்லது இனிமையான ஹேர் பேக் போல செயல்படலாம்.
- உங்களுக்கு சுருட்டை முடி இருந்து, முடி சிக்கல் விழும் பிரச்சினை இருந்தால் சிகைக்காய் தேய்த்து குளித்தால் முடி சிக்கல் விழாமல் நன்றாக இருக்கும்.
முடிந்தவரை இயற்கையாக நம் முடி ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்.