சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருவதில்லையா..?? உடனே இதை செய்யுங்கள்..!! - Tamil Crowd (Health Care)

சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருவதில்லையா..?? உடனே இதை செய்யுங்கள்..!!

 சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருவதில்லையா..?? உடனே இதை செய்யுங்கள்..!!

மாதத்துக்கு ஒருமுறை எல்பிஜி(LPG) விலை நிர்ணயம் செய்யப்பட்டுவருகிறது. சென்னையில் சமையல் எரிவாயு விலை ரூ.825க்கு விற்பனையாகி வருகிறது. மாதந்தோறும் விலை ஏற்றம் இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கவே மக்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள். அத்துடன் சிலிண்டருக்கான மானியம் அரசால் வழங்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், அது பலரை சென்று சேர்வதில்லை என்பதே உண்மை. 

இந்த செய்தியையும் படிங்க….

மே 1ஆம் தேதி முதல் – அரசு அதிரடி அறிவிப்பு..!! 

சிலர் வங்கி கணக்கில் வரும் மானிய தொகையை, மொத்தமாக எடுத்து செலவு செய்வார்கள். சிலரோ, மானியம் என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்கும் அளவுக்கு அதன் பயன் தெரியாமல் இருப்பார்கள். மானியம் பெறுவதற்கு உங்களுக்கு உரிய தகுதி இருக்கும் பட்சத்தில் உங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும் . அதன் பிறகுதான் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

உங்கள் ஆண்டு வருமானம் 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால் உங்களுக்கு மானியம் கிடைக்காது ஒருவேளை உங்கள் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு மானியம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் உங்கள் எல்பிஜி ஐடி(LPG -ID) கணக்கு இணைக்கப்படவில்லை என்று அர்த்தம்.

இதனால் நீங்கள் உங்கள் விநியோகஸ்தர்கள் அல்லது கட்டணமில்லா எண் 18002333555 அழைப்பதன் மூலம் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். ஆதார் அட்டை இல்லாமலும் எல்பிஜி (LPG)மானியம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

Mylpg.in என்ற இணையத்தில் சென்று உங்கள் எல்பிஜி(LPG) சேவை வழங்குநரை தேர்வு செய்ய வேண்டும்.

Join DBT என்பதை கிளிக் செய்து செய்யுங்கள். அதில் உங்கள் ஆதார் எண் இல்லாமல் மானியம் பெற டிபிடிஎல் சேர்வதற்கான விண்ணப்பம். அதை தேர்வு செய்யலாம்.

இந்தியன் ஆயில் வலைத்தளத்தில் சென்று மானிய நிலை என்பதை கிளிக் செய்து PAHAL என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் மானியம் பெறப்படவில்லை என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் எல்பிஜி(LPG) புக்கிங் அதற்காக நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண் மற்றும் உங்கள் எல்பிஜி ஐடி(LPG- ID)யை குறிப்பிடுங்கள் அதை சரிபார்த்து சமர்ப்பித்த பிறகு மானியம் தொடர்பான முழு தகவல்கள் உங்கள் கண்முன் தோன்றும்.

இந்த செய்தியையும் படிங்க….

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்-ஸ்டெர்லைட்: ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் அனுமதி..!! 

நீங்கள் எவ்வளவு மானியம் பெற்றுளீர்கள்? எவ்வளவு மானியம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்தும் எவ்வளவு மானியம் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும் உங்களுக்கு தெளிவான ஒரு தகவல் கிடைக்கும்.

Leave a Comment