சிம்பிள் ஸ்டெப்ஸ்-SBI-யில் உடனடி இன்சூரன்ஸ் ரூ40 லட்சம்; வரிச் சலுகையும் உண்டு: ..!! - Tamil Crowd (Health Care)

சிம்பிள் ஸ்டெப்ஸ்-SBI-யில் உடனடி இன்சூரன்ஸ் ரூ40 லட்சம்; வரிச் சலுகையும் உண்டு: ..!!

 சிம்பிள் ஸ்டெப்ஸ்-SBI-யில்  உடனடி இன்சூரன்ஸ் ரூ40 லட்சம்; வரிச் சலுகையும் உண்டு: ..!!


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி ஆயுள் பாதுகாப்பு அளிக்கிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சில செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் எஸ்பிஐ யோனோவின் ஆயுள் காப்பீட்டை உடனடியாகப் பெறலாம். எஸ்பிஐ லைஃப் கவர் திட்டத்துடன் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது அன்புக்குரியவர்களை பாதுகாக்க ரூ.40 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டைப் பெறலாம். இந்த திட்டம் எஸ்பிஐ லைஃப் சம்பூர் சுரக்‌ஷா என்று அழைக்கப்படுகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

பொதுமக்கள் உடனே செய்யவேண்டியது., சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.! 

எஸ்பிஐ லைஃப் சம்பூர் சுரக்‌ஷா திட்டம் தனிநபர்களுக்கானது அல்ல. இத்திட்டம் பணியாளர் மற்றும் பணியாளர் அல்லாத குழுக்களுக்கானது. பணியாளர்களுக்கான வயது வரம்பு 18-79. பணியாளர் அல்லாதவர்களுக்கான வயது வரம்பு 16-79. இது பிரீமியம் உள்ள ஆயுள் காப்பீட்டு திட்டம். இந்தத் திட்டம் மூலம் உங்கள் குழு உறுப்பினர்களுக்கு நிதி உதவி மூலம் பாதுகாப்பை வழங்குகிறது. குழுவின் தேவைகளுக்கு ஏற்ப நன்மைகளை வரையறுக்க நெகிழ்வுத் தன்மை மற்றும் எளிதான செயல்முறை மூலம் காப்பீடு பெற முடியும்.

  • எஸ்பிஐ லைஃப் திட்ட விதிகளால் வரையறுக்கப்பட்டபடி உறுதி செய்யப்படும் தொகை சம்பூர் சுரக்‌ஷா ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.
  • எஸ்பிஐ லைஃப் சம்பூர் சுரக்‌ஷா உங்களுக்கு வருமான வரி சலுகைகள் அல்லது விலக்குகள் இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின் படி வழங்குகிறது.
  • யோனோ வழியாக எஸ்பிஐ இன்ஸ்டண்ட் லைஃப் கவர் பெறுவது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ ஆப் மூலம் இந்த காப்பீட்டை பெறலாம்.
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ப்ளே ஸ்டோரிலிருந்து அல்லது எஸ்பிஐ இணையதளத்திலிருந்து யோனோ ஆப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பின் அவற்றில் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • அதன்பின் நீங்கள் எஸ்பிஐ யோனோ ஆப் உங்கள் தகவல்களை பதிவு செய்த பின் அதில் உள் நுழைய வேண்டும்.
  • எஸ்பிஐ யோனோவில் உள்நுழைந்த பிறகு காப்பீட்டு பிரிவுக்கு செல்ல வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒரு பாலிசி வாங்குதல் பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு எஸ்பிஐ லைஃப் சம்பூர் சுரக்‌ஷா காப்பீட்டை எடுக்க வேண்டும்.
  • இந்த எளிய வழிமுறையை பின்பற்றி எஸ்பிஐ சம்பூர் சுரக்‌ஷா காப்பீட்டை பெற்று பயன்பெறுங்கள்.

Leave a Comment