சித்த மருத்துவ குறிப்புகள்:ஓமத்தின் பயன்கள். - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்:ஓமத்தின் பயன்கள்.

 சித்த மருத்துவ குறிப்புகள்: ஓமம் பயன்கள்:

 ஓமத்தின் பயன்கள்

  •  ஓமம்’ மிளகு- தலா 50 கிராம், பனை வெல்லம் 100 கிராம் ஆகியவற்றை இடித்து பொடியாக்கி நெல்லிக்காய் அளவு காலையிலும் இரவிலும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பசம், பேதி போன்றவை குணமாகும்.
  •  ஓமம் ,மாம்பருப்பு, கசகசா, கடுக்காய்- தலா 50 கிராம் எடுத்து பொடியாக்கி மோரில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து குடித்தால் பேதி, சீத பேதி இரண்டும் உடனே நிற்கும்.
  •  ஓமம், நாவல்கொட்டை, துத்தி ,பிரண்டை தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் உடனே குணமாகும், மூளை கிருமிகளும் அழியும்.
  •  ஓமம், அருகம்புல் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் நாள்பட்ட புண்கள் ஆறும்.
  •  ஓமத்தை, ஆடாதோடை இலை சாறு சேர்த்து அரைத்து 10 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் காசநோயை குணமாக்கும்.
  • ஓமத்தை, நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து குளித்து வந்தால் சைனஸ் எனப்படும், நோய் குணமாகும்.
  •  ஓமத்தை ஒரு ஸ்பூன் இரவில் வெந்நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
  •  ஓமம் ,வேப்பிலை தலா 5 கிராம் எடுத்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் குடல் கிருமிகள் அனைத்தும் அழியும்.
  •  ஓமம், கோதுமை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து வீக்கம் உள்ள இடங்களில் பற்று போட்டால் மூன்றே நாட்களில் வீக்கம் கரையும்.
  •  ஓமம், இஞ்சி இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவில் 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.

Leave a Comment