சித்த மருத்துவ குறிப்புகள்: கடுக்காய் பயன்கள்: - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: கடுக்காய் பயன்கள்:

  சித்த மருத்துவ குறிப்புகள்: கடுக்காய் பயன்கள்:

கடுக்காய் பயன்கள்

  •  கடுக்காய் சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும், பிறகு மிதமான சூட்டில் அந்த தண்ணீரை எடுத்து புண்களைக் கழுவினால் அவை விரைவில் ஆறும்.
  •  கடுக்காய் பொடி செய்து வெண்ணெயில் குழைத்து ஆசனவாயில் போட்டு வந்தால் மூலத்தில் உண்டாகும் புண் ஆறும்.
  • கடுக்காய் தூள் 100 கிராம் ,உப்பை 20 கிராம் கலந்து அதில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் உடனே குணமாகும்.
  •  கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ தலா 200 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும், அதிக ரத்தப்போக்கு உடனே நிற்கும்.
  •  கடுக்காய், ஓமம், மாம்பருப்பு, கசகசா தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும் .இதில் இரண்டு கிராம் பொடியை எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, உஷ்ணபேதி, வயிற்று உளைச்சல் போன்ற அனைத்தும் தீரும் .
  • கடுக்காய் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
  • கடுக்காய் பொடி ,அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும், சிறுநீரக நோய்களும் தீரும்.
  •  கடுக்காய் ,தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கண்பார்வையில் தெளிவு உண்டாகும்.
  • கடுக்காய் , தாமரைப்பூ, ஏலக்காய்- தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
  •  கடுக்காய், சித்தரத்தை இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு ,மூக்கில் ஏற்பட்ட புண்கள் போன்றவை குணமாகும்.

Leave a Comment