சித்த மருத்துவ குறிப்புகள்: சோம்பின் பயன்கள்: - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: சோம்பின் பயன்கள்:

 சித்த மருத்துவ குறிப்புகள்: சோம்பின் பயன்கள்:

 சோம்பு 



  • சோம்பு, அசோக பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.
  •  சோம்பு, வெந்தயம் இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான வயிற்று வலியும் தீரும்.
  •  சோம்பை, கற்பூரவல்லி சாற்றில் ஊற வைத்து சூரிய ஒளியில் காய வைத்து பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் சளி உள்ளிட்ட பிற கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.
  •  சோம்பு, அதிமதுரம் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
  • சோம்பு,வேப்பிலை , மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் அனைத்தும் இறந்து போகும்.
  •  சோம்பு, மிளகு  சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும் இதில் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் மறையும்.
  •  சோம்பு, கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து தயிர் சேர்த்து அரைத்து தேமல், படை, சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் அவை உடனே குணமாகும்.
  •  சோம்பு, பார்லி, மஞ்சள் மூன்றையும் ஒன்றாக சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
  •  சோம்பு, சாரணை வேர், பசலைக் கீரை மூன்றையும் சம அளவு எடுத்து கசாயம் காய்ச்சி குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
  •  சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து கசாயம் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

Leave a Comment