சித்த மருத்துவ குறிப்புகள்: முடக்கத்தான் கீரையின் பயன்கள் மற்றும் முருங்கைக் கீரையின் பயன்கள். - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: முடக்கத்தான் கீரையின் பயன்கள் மற்றும் முருங்கைக் கீரையின் பயன்கள்.

 சித்த மருத்துவ குறிப்புகள்: முடக்கத்தான் கீரையின் பயன்கள் மற்றும் முருங்கைக் கீரையின் பயன்கள்.

 முடக்கத்தான் கீரை:

  • முடக்கத்தான் கீரையுடன் சிறிது வாய்விளங்கம் சேர்த்து அரைத்து இரவு உணவுக்குப் பிறகு நெல்லிக்காய் அளவுக்கு சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
  • கீரையுடன் சிறிது சதகுப்பை இலை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
  • முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து அவற்றை பூண்டு சிறிது, மஞ்சள்தூள் 2 சிட்டிகை ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான மூட்டு வலிகள் குணமாகும் .
  • முடக்கத்தான்கீரை சாற்றில் சுக்கு, மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரை சாறு எடுத்து லேசாக சூடுபடுத்தி அதில் சில துளிகளை விட்டால் காதுவலி குணமாகும்.
  • முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டால் தடைபட்ட தாமதித்த மாதவிலக்கு குணமாகும்.
  • முடக்கத்தான் கீரையுடன் கடுக்காயைத் தட்டிப்போட்டு கசாயம் வைத்து குடித்தால் மூல நோய்கள் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரை சாற்றில், மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து சொறி, படை, சிரங்கு மீது பூசினால் குணம் பெறலாம்.
  • முடக்கத்தான் கீரை சாற்றில், முழு கருப்பு எள் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி 2 ஸ்பூன் அளவு எடுத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் வலிமை உண்டாகும் .

முருங்கை கீரையின் பயன்கள்:

  • முருங்கைக் கீரையோடு, உப்பு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும் .
  • முருங்கைக் கீரை சாற்றில் ,மிளகு, அதிமதுரம் இரண்டையும் ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.
  • முருங்கைக்கீரையைப் ,பூண்டு, உப்பு, மஞ்சள் சேர்த்து அவித்து தினமும் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் குணமாகும்.
  • முருங்கைக் கீரை சாற்றில், சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
  • முருங்கைக் கீரை சாற்றில் ,தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் உடனே நிற்கும்.
  • முருங்கைக் கீரை சாற்றில் ,எலுமிச்சம் பழத்தை பிழிந்து, தேன் கலந்து முகத்தில் தடவினால் பருக்கள் ,கரும்புள்ளிகள் மறையும்.
  • முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி, பார்லி 200 கிராம் ,சீரகம் 2 ஸ்பூன், மஞ்சள் சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கசாயம் வைத்து வடிகட்டி குடித்தால் நீர்கட்டு உடைந்து சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
  • முருங்கைக்கீரையுடன் கருப்பு எள் சேர்த்து கசாயம் வைத்து தொடர்ந்து ஒரு வாரம் குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
  • முருங்கைக்கீரை குழந்தை தாய் பால் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைசுற்றல் நிற்கும்.
  • முருங்கைக் கீரை சாற்றை காலை, மாலை இரு வேளையும் குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.
  • முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி, மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
  • முருங்கைக்கீரையை நீர் சேர்க்காமல்  அரைத்து கண்கள் மீது கட்டிக் கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.
  • கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகும் வராது.
  • முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் புது ரத்தம் ஊறும்.

Leave a Comment