சித்த மருத்துவ குறிப்புகள்: கற்பூரவள்ளி பயன்கள், கறிவேப்பிலை பயன்கள் - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: கற்பூரவள்ளி பயன்கள், கறிவேப்பிலை பயன்கள்

 சித்த மருத்துவ குறிப்புகள்: கற்பூரவள்ளி பயன்கள், கறிவேப்பிலை பயன்கள் 

கற்பூரவள்ளி பயன்கள்:

  1.  கற்பூரவல்லி இலையை அடிக்கடி சாப்பிட்டால் மூக்கடைப்பு விலகும் .
  2. கற்பூரவள்ளி இலையை சாறு பிழிந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
  3. கற்பூரவள்ளி சாற்றுடன்( 200 மில்லி) சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் சைனஸ், தலைபாரம், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
  4. குழந்தைகளுக்கு அடிக்கடி கற்பூரவல்லி இலைச்சாறு 5 மில்லி கொடுத்து வந்தால் மாந்தம் விலகும்.
  5.  கற்பூர வள்ளிச் சாற்றில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் இருமல் உடனே நிற்கும்.
  6. கற்பூரவள்ளி இலையை தினமும் இரண்டு என்ற அளவில் சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகும்.

கறிவேப்பிலையின் பயன்கள்:

  •  கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
  •  கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி கீரை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
  • கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து அதில் பெருங்காயத்தூள் சேர்த்து தினமும் உணவுக்குப் பிறகு 2 கிராம் அளவு சாப்பிட்டால் வாயுக்கோளாறுகள் நீங்கும்.
  •  கருவேப்பிலை, நிலாவரை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் பெருவயிறு மறையும், மலசிக்கல் தீரும்.
  •  கருவேப்பிலையை, மிளகாய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வெடிப்பு குணமாகும்.
  •  கருவேப்பிலையை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் பித்தம், மூலம் குணமாகும்.
  •  கறிவேப்பிலையை மஞ்சள், கசகசா சேர்த்து அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குளித்தால் வடுக்கள் விரைவில் மறையும்.
  •  உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பாலில் கலக்கிக் குடித்தால் உடல் வலிமை பெறும்.
  •  கறிவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடியாக்கி தினமும் காலை ,மாலை இரு வேளையும் உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மூட்டு வலி, வாத நோய்கள் குணமாகும்.
  •  கறிவேப்பிலை, நாவல் மர இலை, கீழாநெல்லி மூன்றையும் சம அளவு எடுத்து விழுதாக அரைத்து பாலில் கலக்கிச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சார்ந்த நோய்கள் குணமாகும் .
  • கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு 3 இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
  •  கறிவேப்பிலையுடன் ,சுட்ட புளி ,வறுத்த உப்பு, வறுத்த மிளகாய், ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் ஜீரண கோளாறுகள் சரியாகும்.
  •  உலர்ந்த கறிவேப்பிலை ,சுக்கு ,மிளகு, சீரகம், உப்பு தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து தினமும் சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.
  •  கருவேப்பிலை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.
  •  கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் நரை முடி மறையும்.
  •  கருவேப்பிலை பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து சாப்பிட்டால் மந்தம், மலக்கட்டு நீங்கும்.
  •  கருவேப்பிலையை அரைத்து முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து குழைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கருப்பாக வளரும்.
  •  கருவேப்பிலை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
  • கறிவேப்பிலையைப் பொடி செய்து எருமைத் தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
  •  கறிவேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி கருப்பாக வளரும்.

  

Leave a Comment