சித்த மருத்துவ குறிப்புகள்: சோற்றுக்கற்றாழை:
கற்றாழையின் பயன்கள்
- சோற்றுக் கற்றாழையை பருக்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் விழுந்து தோல் மென்மையாகும்.
- கற்றாழையை நீளவாக்கில் கீறி அதை எடுத்து கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குணமாகும்.
- சோற்றுக் கற்றாழையை 7 முறை சுத்தம் செய்து, பெருங்காயத்தூள் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி உடனே மறையும்.
- சோற்றுக் கற்றாழை சாற்றில், தேன் கலந்து காய்ச்சி வடிகட்டி தினமும் சாப்பிட்டு வந்தால் கிருமிகளால் ஏற்பட்ட நோய்கள் குணமாகும் .
- சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை சோற்றை, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்று ஏற்படாது.
- சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழைச் சோற்றுடன், மிளகுதூள் சேர்த்து சாப்பிட்டால் கப நோய்கள் தீரும்.
- சோற்று கற்றாழை சாறில், பச்சை பயறை ஊற வைத்து காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்.
- சோற்றுக் கற்றாழைச் சோற்றில், கடுக்காய் தூள், வெல்லம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் ஓரிரு முறை பேதியாகும். இதனால், நீரடைப்பு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
- சோற்றுக்கற்றாழை சோற்று, படிகாரத்தைக் கலந்து நீர் கசியும் அந்த நீரை கண்களில் வைத்துக்கொண்டால் கண் நோய் குணமாகும்.
- சோற்றுக்கற்றாழையை நெருப்பில் வாட்டிப் பிழிந்து சாறு எடுத்து அதில் மூன்று சொட்டுகள் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.