சித்த மருத்துவ குறிப்புகள் கீழாநெல்லியின் பயன்கள் மற்றும் சுண்டைக்காய் பயன்கள்.
கீழாநெல்லியின் பயன்கள்
கீழாநெல்லி வேரை இடித்து, பிழிந்து பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
கீழாநெல்லி இலை சாறு பிழிந்து. கற்கண்டு சேர்த்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் குணமாக்கும்.
கீழாநெல்லி கீரையை சமைத்து சாப்பிட்டால் கண்களில் மஞ்சள் நிறம் மாறும்.
கீழாநெல்லி இலையுடன், உளுந்து ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து நகத்தில் பூசினால் நகங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
கீழாநெல்லி இலை, கோவை இலை ,அசோகமரப்பட்டை, நாவல்மரப்பட்டை, அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
கீழாநெல்லி, மருதாணி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கால்களில் பூசினால் பித்த வெடிப்பு, சேற்றுப் புண் போன்றவை குணமாகும்.
கீழாநெல்லி இலை சாறு பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்( 30 மில்லி அளவு மட்டும்) கல்லீரல் நோய்கள், பித்தப்பை கற்கள், போன்றவை குணமாகும்.
கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
கீழாநெல்லி கசாயம் வைத்து அதில் படிகாரம் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாயில் ஏற்படும் நோய்த் தொற்றுகள் குணமாகும்.
சுண்டைக்காய் பயன்கள்
சுண்டைக்காய் பொடி செய்து 5 கிராம் பொடியை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
சுண்டைக்காய் வற்றல், மாதுளை ஓடு இரண்டையும் சேர்த்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் .
சுண்டைக்காய் வற்றல்அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும் சுண்டைக்காய் வற்றல் ஓமம் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும் சுண்டைக்காய் வற்றல் சீரகம் சோம்பு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்