சித்த மருத்துவ குறிப்புகள்: செம்பருத்தியின் பயன்கள்: - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: செம்பருத்தியின் பயன்கள்:

 சித்த மருத்துவ குறிப்புகள்:

 செம்பருத்தியின் பயன்கள்:

 செம்பருத்தி.

  •  செம்பருத்தி பூவை தண்ணீரில் போட்டு ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரோடு செம்பருத்திப்பூவை அரைத்து சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.
  •  செம்பருத்தி பூவை மென்று தின்று மோர் குடித்தால் அடிக்கடி பேதியாவது நிற்கும் .
  • செம்பருத்திப் பூ மற்றும் இலையை வெள்ளரிச் சாறு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தாகம் தீரும்.
  •  செம்பருத்தி மொட்டை, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
  •  செம்பருத்தி பூவுடன், சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், தலைசுற்றல், ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
  •  செம்பருத்தி பூவுடன், மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ரத்த சுத்தி உண்டாகும், தோல் நோய்களும் குணமாகும்.
  •  செம்பருத்தி பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.
  •  செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.
  •  செம்பருத்திப் பூக்களை அரைத்து எலுமிச்சம்பழச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், மாதவிலக்கு ஒழுங்காகும்.
  •  செம்பருத்திப் பூக்களை தலையில் வைத்து படுத்துக்கொண்டாள் பேன், பொடுகு தொல்லை தீரும்.

Leave a Comment