சிகிச்சையில் ஒரு லட்சத்திற்கும் -அதிகமான கொரோனா நோயாளிகள் : டாப் 8 மாநிலங்களில் தமிழகம்..!! - Tamil Crowd (Health Care)

சிகிச்சையில் ஒரு லட்சத்திற்கும் -அதிகமான கொரோனா நோயாளிகள் : டாப் 8 மாநிலங்களில் தமிழகம்..!!

 சிகிச்சையில் ஒரு லட்சத்திற்கும் -அதிகமான கொரோனா நோயாளிகள் : டாப் 8 மாநிலங்களில் தமிழகம்..!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் தினசரி எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இந்தியாவின் டாப் 8 மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. 

இந்த செய்தியையும் படிங்க….

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு -வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன..!! 

அதில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது ஒரு கசப்பான செய்தி.

  1. மகாராஷ்டிரா (7,00,207), 
  2. உத்தரப்பிரதேசம் (2,97,616), 
  3. கர்நாடகா (2,62,181), 
  4. கேரளா (2,19,221), 
  5. ராஜஸ்தான் (1,36,702), 
  6. சத்திஸ்கர் (1,23,835), 
  7. குஜராத் (1,15,006) 
  8.  தமிழ்நாடு (1,05,180) 

பேர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டியலில் தமிழகம் கடைசி இடமான எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு தொற்று பரவலை சமாளிக்க பல்வேறு விதிமுறைகளை அமல் செய்துள்ளது.

Leave a Comment