சமையலர், உதவியாளருக்கு தேர்தல் பணி|( தேர்தல் அலுவலர் கிரேடு 2 ) மிகுந்த சிரமங்களையும், குழப்பங்களுக்கும், தடுமாற்றத்தை தான் வழிவகுக்கும் – சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் பணி கிரேடு 2 ஆக பணியாற்றும் பணியாளர்களின் பணி வாக்காளர் பெயர் எழுதுதல், வரிசை எண் எழுதுதல், ஆதார் அல்லது வாக்காளர் அட்டை சரிபார்த்தல், மை வைக்கும் பணி, கையொப்பம் பெற வேண்டிய பணி ஆகியவை நிறைந்தவையாகும்.
மேலும் கல்வி தகுதியில்லாதவர்களும், குறைந்தபட்ச கல்வி தகுதி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு வரை பயின்றுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி சமையலர், உதவியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணி தேர்தல் அலுவலர் கிரேடு 2 பணி மிகுந்த சிரமங்களையும், குழப்பங்களுக்கும், தடுமாற்றத்தை தான் வழிவகுக்கும். எனவே, இது குறித்து பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எழுதப்படிக்க தெரியாதவர்கள் எப்படி 17A ஏனென்றால் அவர்கள் வருபவர்களின் அடையாளச் சான்று பார்த்து எழுதி அதற்குப் பக்கத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் அவர்களில் சிலருக்கு கையெழுத்து மட்டுமே போட தெரியும் எப்படி அவர்கள் PO2 வேலை செய்வார்கள்…