சமூக அறிவியல்(SOCIAL SCIENCE)
I)முதல் உலக போர் :(1914)
1) 1789- இல் அரசியல் சமூக செயல்பாடுகள் தொடக்கம
2) 1914-
- உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனை.
- நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு (வரலாற்று ஆசிரியர்கள்).
- தொழில்சாலைகள் சார்ந்த முதல் போர்.
- இப்போரால் உலக அரசியல் வரைபடம் மீண்டும் வரையப்பட்டது.
- போரின் முடிவில் மூன்று பேரரசுகள் சிதறுண்ட ன:
- ஜெர்மனி
- ஆஸ்திரியா -ஹங்கேரி, உதுமானியப் பேரரசு.
- இப்போரின் மிகப்பெரும் விளைவு ரஷ்ய புரட்சி.
- உலக நாடுகள் பன்னாட்டு சங்கத்தின் மூலமாக உலக அமைதியை ஏற்படுத்த முயன்றனர்.
- பன்னாட்டு சங்கம் (பன்னாட்டு அமைதி) நிறுவனம் உருவாக்கப்பட்டது.
II)காலனிகளுக்கான போட்டி:
மிகை உற்பத்தி:
முதலாளித்துவம் சார்ந்த தொழில்களின் நோக்கம் மிகை உற்பத்தி செய்வதாகும்.
தகவல் பரிமாற்றம், போக்குவரத்து:
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகவல் பரிமாற்றம் போக்குவரத்து ஆகிய துறைகளில் ஏற்பட்ட புரட்சியானது ஆப்பிரிக்காவிலும், ஏனைய பகுதிகளிலும் ஐரோப்பிய விரிவாக்கம் அரங்கேற துணை புரிந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கவரும் அம்சம்:
- ஐரோப்பா மேலாதிக்க சக்தியாக உருப்பெற்றது.
- ஆசியாவும் ,ஆப்பிரிக்காவும் காலனிகளாக பிரிக்கப்பட்டது.
- இங்கிலாந்து ஒப்புயர்வற்ற இடத்தை வகித்ததோடு உலக முதலாளித்துவத்துக்கு தலைமையாகவும் விளங்கியது.
- சந்தை கச்சாப் பொருட்களின் தேவை முதலாளித்துவ நாடுகளை போட்டியில் இறங்கச் செய்தது.
முற்றுரிமை முதலாளித்துவத்தின் எழுச்சி:
* 1870-இல் சுதந்திரப் போட்டி உரிமைகளின் முதலாளித்துவம் ஆக மாறியது.
*சுதந்திரம் எனும் பழைய கோட்பாடு சரிந்து விழுந்தது.
- அமெரிக்கா- கூட்டு நிறுவனங்கள்
- ஜெர்மனி – வணிகக் கூட்டமைப்பு
* அதிகாரமிக்க கூட்டு நிறுவனங்களும் கூட்டுரிமை குழுக்களும் அரசுகளின் மீது மேலாதிக்கம் செலுத்தின.
கூட்டு நிறுவனம்:
பொருள்களை உற்பத்தி செய்து வினியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழில்சார் நிறுவனம்.
ஒரே வணிகத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு இடையே தொழில் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதன் அடிப்படையில் உருவாகும் அமைப்பைப் குறிப்பது.
சந்தையின் மீது முற்றுரிமை செல்வாக்கை செலுத்துவது.
ஏகாதிபத்தியமும் அதன் முக்கிய பண்பு கூறுகளும்:
முதலாளித்துவம் தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்தியத்திற்கு இட்டுச்செல்கிறது.
சந்தை கச்சாப் பொருட்களின் தேவை அதிகமானது.
லெனின்:
முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம்.
ஏகாதிபத்தியம்:
ஏகாதிபத்தியம் என்பது காலணிகளை பற்றியது மட்டுமல்ல ,அது ஒரு முழுமையான முறையாக ராணுவ மையம் ஆக்கத்திற்கும், முழுமையான போருக்கும் இட்டுச்சென்றது.
III) வல்லரசுகளின் போட்டி:
ஐரோப்பா :
i)ஐரோப்பாவில் 1870 இல் பிறகு காரணி ஆதிக்கப் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள்
- ஜெர்மனி
- பிரான்ஸ்
- இங்கிலாந்து
- பெல்ஜியம்
- இத்தாலி.
ii)19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சக்திகள் உலகில் ஏனைய பெரிய ,சிறிய நாடுகளை காலனி படுத்தி அவற்றை சுரண்டினர்.
iii) 1880- இல் பெரும்பாலான ஆசிய நாடுகள்காலனி மயமாக்கப்பட்டன.
iv) 1881 முதல் 1914 வரை- ஆண்டுகளுக்கு இடையே ஆப்பிரிக்காவும் கைப்பற்றப்பட்டு காலனிகளாக அமைக்கப்பட்டது.
v) பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனி தொழில்துறையில் புரிந்த சாதனைகள் அதற்கு ஐரோப்பாவில் ஒரு மேலாதிக்க நிலையை வழங்கியது.
vi) விரிவாக்கம் செய்ய வெற்றிடங்கள் இல்லாததால் ஏகாதிபத்திய சக்திகள் தங்களுக்குள்ளேயே அடுத்த நாட்டிற்கு சொந்தமான பகுதிகளை கைப்பற்ற முயன்றன.
வல்லரசுகளுக்கு இடையே மோதல்கள்:
-இங்கிலாந்திற்கு மன நிறைவு ஏற்படவில்லை.
-இங்கிலாந்து ஜெர்மனி மற்றும் அமெரிக்காவுடன் போட்டி இட வேண்டி இருந்தது.
காரணம்:
– இருநாடுகளும் விலை மலிவான பண்டங்களை, உற்பத்தி செய்து அதன் மூலம் இங்கிலாந்தில் சந்தைகளை கைப்பற்றின.
-ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா வல்லரசுகளுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன.
தென்னாப்பிரிக்காவின் பிரதம அமைச்சர் சிசில் ரோஸ்ட் கூற்று:
” உலகம் ஏறத்தாள பொட்டலங்களை அகப்பட்டு விட்டன அதில் விடுபட்ட பிரிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு காலனிகளாக ஆக்கப்பட்டு விட்டன”.
ஆசியா :ஜப்பானின் எழுச்சி:
ஜப்பான் (1867 முதல் 1912 மெய்ஜி சகாப்தம்):
1)மேற்கத்திய நாடுகளை பின்பற்றி பல துறைகளில் அவற்றுக்கு நிகராக மாறியது.
2) நவீன ராணுவம், கப்பற்படை ,தொழில்துறை ஆகியவற்றுடன் முன்னேறிய ஜப்பான் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் ஐரோப்பிய சக்திகளை அப்படியே பின்பற்றியது .
3)ஆட்சியாளர்கள் நிலமானிய முறையை மேற்கொண்டாலும் ,ஜப்பான் மேலைநாட்டுக் கல்வியையும், இயந்திர தொழில்நுட்பத்தையும் ஏற்றுக்கொண்டது .
4) i)1894- ஜப்பான் சீனாவின் மீது போர் தொடுத்தது. இப்போர் வலுக்கட்டாயமாக ஒரு போரை மேற்கொண்டது. இதன் முடிவே ஜப்பான் சிறிய நாடாக இருப்பினும் சீனாவை வெற்றிகொண்டது.
ii)) லியோடன் தீபகற்பம், ஆர்தர் துறைமுகம் இவற்றின் மீது ஜப்பான் போர் தொடுத்தது. இதற்கு ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வல்லரசுகள் எச்சரித்தும் , நடவடிக்கை மூலம் கிழக்கு ஆசியாவில் ,ஜப்பான் வலிமை மிகுந்த அரசு என மெய்ப்பித்தது.
5) ஐரோப்பிய அரசுகள் கொடுத்து அதிகமான அழுத்தத்தின் காரணமாக ஜப்பான் துறைமுகத்தின் மீது தனது கோரிக்கைகளை விட்டுக் கொடுத்தது.
6)இச்சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ரஷ்யா- மஞ்சூரியா வுக்கு பெரும் படையை அனுப்பியது.
7) 1902- ஜப்பான் இங்கிலாந்துடன் உடன்பாடு:
ரஷ்யா மஞ்சூரியாவிலுள்ள தனது படைகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.
8) 1904- ரஷ்யா- ஜப்பானிய போர்:
ரஷ்யா ஜப்பான் மீது போர் தொடுத்தது. ரஷ்யா இப் போரில் தோல்வி பெற்று ஜப்பான் வெற்றிகொண்டது.
9) அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சி:
சமரச முயற்சியின் விளைவாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் மீண்டும் பெற்றது.
ஜப்பானிய அரசியல் விவேகம்:
- 1905 -கொரியாவின் உள்நாட்டு, அயல்நாட்டு கொள்கைகளை ஜப்பான் கட்டுப்படுத்தியது.
- 1910 -கொரியாவை, ஜப்பான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- 1912 -சீனாவில் மஞ்சு அரசவம்சம் வீழ்ச்சியுற்றது.
i) ஜப்பான் சீனா மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தது.
ii) இரண்டு ஜப்பானிய ஆலோசகர்களை சீன அரசாங்கம், பதவியில் அமர்த்த வேண்டும். என்ற கோரிக்கையை ஜப்பான் முன்வைத்தது.
காலணிகள் அமைக்கப்படுதல், போர்களும் :
வெற்றிகள்:
* இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் இம்மூன்று நாடுகளும் கண்டத்தை தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்டனர் .
*ஜெர்மனிக்கும் ,இத்தாலிக்கும் சில இடங்கள் தரப்பட்டன .
*செல்வாக்கு மண்டலங்கள்:
- இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சீனாவில் தங்களுக்கென செல்வாக்கு மண்டலங்களை நிறுவினர்.
- கொரியா, தைவான் நாடுகளை ஜப்பான் தன் வசப்படுத்தியது .
- இந்தோ- சீனா பிரான்ஸ் கைப்பற்றியது.
- ஈரான்- இங்கிலாந்தும், ரஷ்யாவும் பிரித்துக்கொண்டன.
போர்கள்:
1)அல்ஜீரியா – கைப்பற்ற பிரான்ஸ் நெடிய கடுமையான போரை மேற்கொண்டது.
2) 1879 -ஆம் ஆண்டு ஜூலு களாலும், 1884- இல் சூடான் படைகளாலும் இங்கிலாந்து தோற்கடிக்கப்பட்டது.
3) 1896- இத்தாலி, எத்தியோப்பிய படைகளால் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டது.
ஐரோப்பிய படைகள் இறுதியில் வெற்றி பெற்றது.
IV)முதல் உலகப் போருக்கான காரணங்களும் விளைவுகளும்:
ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும், எதிரணி சேர்க்கைகளும்:
1900 ஐரோப்பிய வல்லரசுகள்:
- ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி ,இத்தாலி இவை மூன்றும் 1882-ல் மூவர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டது.
- இந்த உடன்படிக்கை பிஸ்மார்க்கின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டது.
- ஜெர்மனியும்,ஆஸ்திரியவும் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளும்.
- பிரான்ஸ், ரஷ்யா 1894 இல்- உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டது.
- இவ்விரு நாடுகளில் ஏதாவது ஒரு நாடு ஜெர்மனி யால் தாக்கப்படும்போது பரஸ்பர உதவி மேற்கொள்ளலாம்.
* இந்தக் கூட்டணியில் இங்கிலாந்து தனிமைப்படுத்தப்பட்டது.
* இங்கிலாந்து இருமுறை- ஜெர்மனிடம் தோல்வி கண்டது.
*ரஷ்யா மீது ஜப்பானின் பகை அதிகமானது.
* ரஷ்யாவும், பிரான்சும் கூட்டணி ஆனது.
ஆகையால் ,
ஜப்பான், இங்கிலாந்துடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது.
ஆங்கிலோ ஜப்பான் உடன்படிக்கை:
- 1902 -ஜப்பான் இங்கிலாந்து உடன்படிக்கையை- இருநாடுகளும் இணைய விரும்பியது.
- 1904-இல் பிரான்சும், இங்கிலாந்தும் நட்புறவு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
- ஒப்பந்தத்தின்படி மொராக்கோ ,எகிப்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது.
- மொராக்கோவில், பிரான்ஸ் சுதந்திரமாக செயல்படுதல்.
- எகிப்தை, இங்கிலாந்து கைப்பற்றியதை அங்கீகரிக்க பிரான்ஸ் உடன்பட்டது.
- ரஷ்யா, இங்கிலாந்து இடையே ஒப்பந்தம்:
பாரசீகம், ஆப்கானிஸ்தான், தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொண்டது.
- இங்கிலாந்து. பிரான்ஸ், ரஷ்யா மூன்று நாடுகளும் மூவர் கூட்டு ஒன்றை ஏற்படுத்தியது .
வன்முறை சார்ந்த தேசியம்:
*தேசப்பற்றின் வளர்ச்சியோடு “எனது நாடு சரியோ, தவறோ நான் ஆதரிப்பேன்” என்ற மனப்பாங்கும் வளர்ந்தது.
* ஒரு நாட்டின் மீதான பற்று, மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவையை ஏற்படுத்தியது .
- இங்கிலாந்து- ஆரவாரமான நாட்டுப்பற்று
- பிரான்ஸ் -வெறிகொண்ட நாட்டுப்பற்று
.ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமான பங்காற்றியது.
ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்புப் மனப்பாங்கு:
- ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம்: “ஜெர்மன் இங்கே உலகத்தின் தலைவன்” என பிரகடனம் செய்தார்.
- 1805- இல் டிரஃபேல்கர் போர்- நெப்போலியனின் தோல்வி இதன் காரணமாக கடல் இங்கிலாந்தின் தனி உரிமை எனக் கருதப்பட்டது.
- இந்நிலையில் ஜெர்மனியின் கப்பற்படை தலங்களையும் கண்ட இங்கிலாந்து, ஜெர்மன் கப்பற்படை தனக்கு எதிரானது என முடிவு செய்தது.
- இங்கிலாந்தும், ஜெர்மனியும் எதிரி நாடுகள் எனவும் , ஏற்கனவே பிரான்ஸ் ஜெர்மனியை எதிரியாகவே கொண்டிருந்தது .
காரணங்கள்:
- 1871-இல் ஜெர்மனியும், பிரான்சும் போரிட்டுக் கொண்டனர்.
- இப்போரில் ஜெர்மனி வெற்றி பெற்றது .
- பிரான்ஸ் நாடு அல்சேஸ் பகுதிகளை ஜெர்மனியிடம் இழந்தது.
ii) மொராக்கோ பிரச்சனை:
- மொராக்கோ விவகாரத்தில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஒப்பந்தத்தை ஜெர்மனி எதிர்த்தது.
- ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. மொராக்கோ சுல்தானை பன்னாட்டு மாநாடு ஒன்றை கூட்டும் படி கூறினார்.
பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு :
i) இளம் துருக்கியர் புரட்சி:
- 1908- இல் துருக்கியில் ஒரு வலுவான நவீன அரசை உருவாக்கும் முயற்சி.
ii) ஆஸ்திரிய- ரஷ்யா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
- ஒப்பந்தத்தின்படி பாஸ்னிய, ஹெர்ஸிகோவினா இரண்டையும் ஆஸ்திரியா இணைத்துக் கொள்வது.
- ஆஸ்திரியாவின் இவ்வறிக்கை செர்பியா தீவிரமாக எதிர்த்தது.
- ஆஸ்திரியாவுக்கு ,ஜெர்மனி உதவியது.
- செர்பியா நாட்டிற்கு ,ரஷ்யா உதவியது.
- ஆஸ்திரியாவுக்கு, செர்பியா நாட்டிற்கு இருவருக்குமான பகை 1914இல் போர் வெடிக்க காரணமாயிற்று.
*பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் தென் மேற்கு ஐரோப்பாவில் துருக்கி வலிமை வாய்ந்த நாடாக பால்கனிலும், போலந்து வரையிலும் பரவியிருந்தன.
* ஆர்மீனிய இனப்படுகொலை:
துருக்கியர்கள் அரங்கேற்றப்பட்டது.
*18 ஆம் நூற்றாண்டில் பிற்பாதியில் துருக்கிய பேரரசின் உறுதியற்ற நிலை கிரீஸ் ,அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக தங்களை துருக்கியில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.
* மாசிடோனியா:
- பல்வேறு இனங்களை கொண்ட மக்களை கொண்டிருந்தது.
- மாசிடோனியா அவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கிரீஸ், செர்பியா, பல்கேரியா, மாண்ட் நீக்ரோ ஆகிய நாடுகளிடையே போட்டிகள் நிலவின.
- கிரீஸ், செர்பியா, பல்கேரியா, நீக்ரோ நாடுகள் இணைந்து -1912 மார்ச் மாதத்தில் எனும்பால்கன் கழகம் அமைப்பை உருவாக்கியது.
முதல் பால்கன் போர்( 1912 -13):
- பால்கன் கழகம் மற்றும் துருக்கி என இரு நாடுகளுக்கிடையே இப்போர் நடைபெற்றது.
- இப்போரில் பால்கன் கழகமே வெற்றி பெற்றது.
- 1913- லண்டன் உடன்படிக்கை மே மாதத்தில் உண்டானது.
அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
மாசிடோனியா அவை பிரித்து அளித்ததில் செல்பியாவையும், கிரீஸ் நாட்டை யும் ,பல்கேரியா தாக்கியது.
பல்கேரியா எளிதாக தோற்கடிக்கப்பட்டது.
1913 ஆகஸ்டில் புகாரெஸ்ட் உடன்படிக்கை:
இரண்டாம் பால்கன் போர் முடிவடைந்தது.
உடனடி காரணங்கள்:
- பிரான்ஸ் பேர்டினண்ட்: கொலை செய்யப்பட்டவர்.
- பிரின்ஸ்ப்: கொலை செய்தவர் .
- கொலை செய்யப்பட்ட ஆண்டு: 1914 ஜூன் 28.
- கொலை செய்யப்பட்டவர் ஆஸ்திரிய நாட்டையும், கொலை செய்தவர் செர்பியாஅவையும் சார்ந்தவர், இந்த சூழ்நிலையை போர் மூல முக்கிய காரணமாகியது .ஆஸ்திரியா, செர்பியா இடையே போர் நடைபெற்றது. ஆஸ்திரியா, சிரியாவை கைப்பற்ற எண்ணியது.
இச்சூழ்நிலையில் ஜெர்மனி, ரஷ்யாவிற்கு எதிராக போர் அறிவிப்பு செய்தது.
- ரஷ்யா, பிரான்ஸ் ,பெல்ஜியம் இந்த மூன்று நாடுகளின் மீது ஜெர்மனி போர் தொடுக்க முயன்றது.
- ரஷ்யாவும், பிரான்சும் ஏற்கனவே கூட்டணியில் இருந்தனர்.
- பெல்ஜியம் நடுநிலைமையான நாடாக இருந்தது.
- ஜெர்மனி மூன்று நாடுகளின் மீதும் போர் தொடுக்க முயற்சி போது பெல்ஜியத்தின் நடுநிலையை மதியாது ஜெர்மனி தாக்கவே இப்போரில் இங்கிலாந்து பங்கேற்றது.
2 போரிடும் முகாம்கள்:
மைய நாடுகள்:
- ஜெர்மனி ,ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி ,பல்கேரியா .
நேச நாடுகள்:
- ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, அமெரிக்கா, பெல்ஜியம், ருமேனியா, செர்பியா, கிரீஸ்,.
மைய நாடுகள்:
இத்தாலி:
- இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுடன் வகுத்தது.
- ட்ரெண்டிநோ இப்பகுதிகள் ஜெர்மனிக்கும், இத்தாலிக்கும் பிரச்சனை ஏற்பட கூட்டணியிலிருந்து விலகியது.
லண்டனில் ரகசிய ஒப்பந்தம் :
1915 ஏப்ரலில் பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளுக்கும் ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
நோக்கம் :
போருக்கு பின்னர் தான் விரும்பிய பகுதி தனக்கு வழங்கப்படும் என்பதன் அடிப்படையில் இத்தாலி மைய நாடுகளுக்கு எதிராக போரில் பங்கேற்றது .
நேச நாடுகள்:
- 1916-இல் ருமேனியா மைய நாடுகளுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தது .
- 1917-இல் கிரீஸ் நாடுகளுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தது.
- ஆனால் இப்போரில் இரு நாடுகளின் பங்கு பெருமளவில் இல்லை.
- அமெரிக்கா- நடுநிலை நாடாக விளங்கியது.
- முதல் 3 ஆண்டுகளுக்கு நேச நாடுகளுக்குத் தார்மீக ஆதரவை நல்கியது.
- அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பெரும் அளவில் பொருள் உதவி வழங்கியது.
அமைதி முயற்சிகள்:
* ரஷ்ய பேரரசர் இரண்டாம் நிகோலஸ் நாடுகள் அனைத்தும் கூடிப்பேசி உலக அமைதிக்கான சகாப்தத்தை ஏற்படுத்திய ஆலோசனை வழங்கினார்.
* 1899, 1907 ஆகிய ஆண்டுகளில் ஹாலந்து நாட்டின் ஹேக் நகரில் இரண்டு அமைதி மாநாடு கூட்டப்பட்ட தோல்வியில் மாநாடு முடிந்தது.
- முடிவில் ரஷ்யா நேச நாடுகள் அணியில் சேர்ந்து போரிட்டது.
- பெல்ஜியம், ஜெர்மனியும் போர் நடைபெற்றது.
- இப்போரில், ஜெர்மனி வெற்றி பெற்றது.
- முடிவில் நேச நாடுகளின் அணியில் போர் செய்ய வேண்டிய சுமை பிரஞ்சுப் படைகளின் மேல் விழுந்தது.
டானென்பர்க் போர் :
இப்போரில் ரஷ்யா இழப்புகளை சந்தித்தது .ஆனால், பிரெஞ்சுப் படைகள் மீதான அழுத்தத்தை குறைத்தது.
மார்ன் போர்:
- பிரஞ்சு படைகள் மற்றும் ஜெர்மனி இடையே போர் நடைபெற்றது.
- இப்போரின் முடிவில் பிரஞ்சு படை வெற்றி பெற்றது .
- பாரிஸ் காப்பாற்றப்பட்டது.
- மார்ன் போர் பதுங்குகுழி போரின் தொடக்கமாகும்
- 1916 பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங் களுக்கு இடையே 5 ஐந்து மாதங்கள் இப்போ நடைபெற்றது.
- ஜெர்மானியர் பிரான்சிஸ் வேடன் கோட்டையைத் தாக்கினர்.
- இப்போரில் ஒரு லட்சம் (1,00,000)வீரர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- ஜெர்மனி, இங்கிலாந்து இடையே போர் நடைபெற்றது.
- இப்போர் சோமி நதிகரையில் நான்கு மாதங்கள் நடைபெற்ற போரின் முதல் நாளில் இங்கிலாந்து 20 ஆயிரம் வீரர்களை இறந்தது.
- முதல் உலகப் போரில் நேச நாடுகளை வெற்றி பெறும் என்பதை தீர்மானித்து.
ரஷ்ய முனைபோர்:
- ரஷ்யா, ஆஸ்திரியா இடையே போர் நடைபெற்றது.
- இப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றது.
- அதேசமயம், ரஷ்யா, ஜெர்மனி மீது போர் தொடுத்தது.
- முடிவில் ஜெர்மனி வெற்றி பெற்றது.
அக்டோபர் புரட்சி:
1917- இல் சார் மன்னருடைய ஆட்சி புரட்சியால் தூக்கி வீசப்பட்டது.
பிரேஸ்ட் லிப்ட் உடன்படிக்கை:
- ஜெர்மனி, ரஷ்யா 1918 மார்ச் 3ல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
- இதற்குப் பின் ரஷ்யா போரில் இருந்து விலகியது.
- ஜெர்மனியின் நிலை உயர்ந்தது.
- போரில் நேச நாடுகள் தோல்வி நிலை ஏற்பட்டது.
- நேச நாடுகளுக்கு உதவிட அமெரிக்க நிலையில் ஜெர்மனியை கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
தூரக்கிழக்கு நாடுகள்:
*சீனாவிற்கு, ஜெர்மனி வழங்கிய உட்பகுதியை ஜப்பான் கைப்பற்றியது.
* சீனாவை கட்டாயப்படுத்தி ஜப்பான் அதிக சலுகைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொண்டது.
பால்கன் பகுதி :
- ஆஸ்திரியா- ஜெர்மனி படைகள் பல்கேரியா உடன் இணைந்து சிரியாவுடன் போர் புரிந்தது.
- ருமேனியா 1916- ஆகஸ்டில் நேச நாடுகள் அணியில் சேர்ந்து.
- இப்போரில் ருமேனியா கைப்பற்றப்பட்டது .
- கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஜெர்மன் காலணிகள் மற்றும் நேச நாடுகளுக்கு இடையே போர் மூண்டது.
- இப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றன.
- கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஜெர்மன் காலணிகள் சரணடைந்தனர்.
- 1916- மே இத்தாலி நேச நாடுகள் அணியில் இணைந்தது.
- ஆஸ்திரியா, இத்தாலி போர் மூண்டது.
- இப்போரில், இத்தாலி போராடியது .
- ஆஸ்திரியா, ஜெர்மனி ஒரு அணியாகவும்- இத்தாலி மறு அணியாகும் போர் மூண்டது.
- இப்போரில் இத்தாலி நிலைகுலைந்தது.
- பெல்ஜியம்
- பிரான்ஸ்
- வடகிழக்கு பகுதி.
- போலந்து
- ருமேனியா
- 1918 நவம்பர் ஜெர்மனி சரணடைந்தது .
- நவம்பர் 11- 1918 முதல் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
- ஜெர்மனி அதிபர் வில்லியம் பதவி விலகல் .
- ஜெர்மனி வழங்க வேண்டிய ஓர் இழப்பீட்டு தொகை 6600 மில்லியன் பவுண்ட்.
- ஜெர்மன் படை வீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் மட்டுமே
- ஜெர்மனி நீர்மூழ்கி கப்பல்களையும், போர் விமானங்களையும் வைத்துக்கொள்ளக்கூடாது.
- ஆஸ்திரியா, ஜெர்மனி இடையே ஒருங்கிணைப்பு தடைசெய்யப்பட்டது .
- ஜெர்மனியின் அனைத்து காலணிகளும் பன்னாட்டு சங்கத்தின் பாதுகாப்பு நாடுகளாக ஆக்கப்பட்டன .
- ரஷ்யா, பல்கேரியா உடன்படிக்கைகளை ஜெர்மனி திரும்பப் பெற்றுக் கொள்ளுதல் .
- அல்சேஸ் பகுதிகள் பிரான்சுக்கு திருப்பித் தரப்பட்டன.
- ரஷ்யாவின் பகுதிகளான பின்லாந்து ,எஸ்தோனியா, லாட்வியா ,லிதுவேனியா ஆகியன சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டன .
- டென்மார்க் மற்றும் சில பகுதிகள் வழங்கப்பட்டன.
- போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது..
- பன்னாட்டு சங்கத்தின் நிர்வாகத்தில் டான்ஸ் துறைமுகம் சுதந்திரமாக செயல்படும்.
- நேசநாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ரைன் லந்து வந்து இருக்கும் .
- துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுக்க வைத்தார்.
- விடுதலை பெற்றுத் தந்ததோடு அதை நவீன மயமாக்கி அது எதிர்மறையான அங்கீகாரத்தில் இருந்தும் மாற்றி அமைத்தார்.
- சுல்தானிய தீர்க்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
- சோவியத் யூனியனின் ஆதரவு அவருக்கு பேருதவியாக அமைந்தது.
- போர்ச் செலவுக்காக இந்தியா 230 மில்லியன் பவுண்ட் , 125 மில்லியன் பவுண்ட் கடனாகவும், 250 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள போர் முறைக்குத் தேவையான பொருள் அனுப்பி வைத்தது.
- இந்தியாவில் பெரும் அளவிலான பொருளாதார இன்னல்கள் ஏற்பட்டன.
- விஷக்காய்ச்சலால் இந்தியாவும் துயரமானது.
- இந்திய அரசியலில் தன்னாட்சி இயக்கம் உதயமாக வழிகோலியது.
- பிளவு பட்டிருந்த காங்கிரஸ் இயக்கம் போரின்போது மீண்டும் இணைந்து.
- ரஷ்ய புரட்சி இந்தியா மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.
- கிலாபத் இயக்கம் உதயமானது.
- முதல் உலகப்போர் இந்திய சமூகம் பொருளாதாரம் அரசியல் மீது பல தாக்கங்களை ஏற்படுத்தியது.
V) ரஷ்யப் புரட்சியும், அதன் தாக்கமும்:
- முதல் உலகப்போரில் ஏற்பட்ட பேரிழப்புகள் பெரும் துயரங்கள் சமூக அரசியல் பொருளாதாரத்தின் மோசமான நிலைகள் புரட்சிக்கு இட்டுச் சென்றன.
- முதல் புரட்சி 1 917 மார்ச்சிலும்,1917- நவம்பரில் .
- மன்னர் பதவி விலக பூர்சுவா பதவியேற்றனர். இவர்கள் போரைத் தொடர விரும்பினார் .
- இதற்கு மக்களும், எனினும் எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது பெரிய புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார்.
- லெனின் ரஷ்யாவில் கம்யூனிச அரசை நிறுவினார்.
- ரஷ்ய விவசாயிகளின் நிலங்களில் பண்ணை அடிமைகளாக கட்டுண்டு கிடந்தனர்.
- ரஷியா தோல்வி இதற்குப் பிறகு சில சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டன .
- 1861 இல் இரண்டாம் அலெக்சாண்டர் அடிமை முறையை ஒழித்து, விவசாயிகளை மீட்டார்.
- புரட்சி வாதிகளின் பங்கு சமதர்மக் கொள்கையின் பால் பற்று கொண்ட மாணவர்கள் புரட்சி கருத்துக்களால் கவரப்பட்ட, இவர்கள் சார் மன்னரால் கொடுக்கப்பட்ட முடிவில் மாணவர்கள் பயங்கரவாதத்தை கைக்கொண்டனர் .
- பயங்கரவாத குழுவில் இணைந்த சில சிறுபான்மைக் குழுக்கள் யூதர்கள், சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சியும் உருவானது.
- மார்க்சிஸ்டுகள் தங்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள் என அறிவித்தனர்.
- ஜப்பான் ரஷ்யா இடையே போர் மூண்டது இப் போரில் ரஷியா தோல்வி பெற்றது.
- 1905 -ஜனவரி- 22 கபோன் என்னும் பாதிரியார் புனித பீட்டர்ஸ் பர்க் நகரை நோக்கி பேரணி நடத்தி சென்றார்.
- அவர்களின் கோரிக்கை தேசிய சட்ட மன்றம், வேளாண் தொழில் துறையில் சீர்திருத்தம், முதலியன.
- காவல்துறையும், ராணுவமும் ,துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
- நாடாளுமன்றம் டூமா.
- தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பு சோவியத்.
- அதன் தலைவர் ட்ராஸ்கி.
- முதல் உலகப் போர் வெடித்தது உடன் ரஷ்யா பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் சேர்ந்து.
- 1916-இல் ரஸ்புடின் என்பவர் கொலை செய்யப்பட்ட, 1917 டூமா முடிவுக்கு வந்தது.
- 1917 -பிப்ரவரி 23 “உலக உழைக்கும் பெண்கள் தினத்தை சோஷலிஸ்ட் கொண்டாடியது”
- 1917- மார்ச் 2: சார் நிக்கோலஸ் பதவி விலகல்.
- ரசியப் பேரரசின் தலைநகர் கிரேடில் நடந்த ஊர்வலத்தில் கோரிக்கைகள் “உழைப்போர் ரொட்டி”
- ” வெளியே வாருங்கள், வேலையை நிறுத்துங்கள்”.
- பிப்ரவரி 24 இல் 4,00,000தொழிலாளர்கள் போராட்டத்தில் இணைந்தனர்.
- 1917 மார்ச் 15-ல் சார் இரண்டாம் நிக்கோலஸ் பதவி விலகல்.
- “அனைத்து அதிகாரங்களும், சோவியத்திற்கே “
- “ரொட்டி, அமைதி, நிலம்”
- ரஷ்ய மொழி சொல்.
- பொருள்: உண்மை.
- 1918 முதல் 1991 வரை சோவியத் யூனியனின் கம்யூனிச கட்சியினுடைய அதிகாரப் பூர்வ நாளேடு ஆகும்.
- தற்காலிக அரசு தடை செய்தது போஸ் பிக்குகளையும் அதன் தலைவரான ட்ராஸ்கி யும் கைது செய்தது .
- பிரதம மந்திரி பொறுப்பேற்று தாராளவாதிகள், மிதவாத, சோஷலிஸ்டுகள் ஆகியோரின் கூட்டணிக்கு தலைமை வகித்தார்.
- செப்டம்பரில் அரசுகளையும் முற்பட்டார்.
- முடிவில் சோவியத் போல்ஷ்விக்குகள் முழுமையான ஆதிக்கம் பெற்றனர்.
- அக்டோபரில் லெனின் போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் குழுவை உடனடி புரட்சி குறித்து முடிவு செய்ய கேட்டுக் கொண்டார் .
- ட்ராஸ்கி ஒரு விரிவான திட்டத்தை தயாரித்தார் .
- 1917 நவம்பர் 8இல் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சி பொறுப்பேற்றது.
- ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி புது பெயரிடப்பட்டது.
- ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியால்
- ரஷ்யாவில் எழுத்தறிவின்மையை ஒழிக்க முடிந்தது.
- தொழில் துறை ,வேளாண்மை உன்னத வளர்ச்சி அடைந்தது.
- பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டன.
- வாக்குரிமை.
- தொழிற்சாலை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.
- நிலம் சமுதாயத்தின் சொத்தாக அறிவிக்கப்பட்டது.
- ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
V)பன்னாட்டு சங்கம் அமைப்புகளும் உறுப்புகளும்:
- பொது சபை: கொள்கைகள் குறித்து விவாதித்தல்.
- செயற்குழு :முடிவு களை செயல்படுத்தும் அமைப்பு.
- செயலகம்: செயலக பணியாளர்களை பணியமர்த்தல்
- பன்னாட்டு நீதிமன்றம் .
- தொழிலாளர் அமைப்பு.
- பிரிட்டன்,
- பிரான்ஸ்
- இத்தாலி
- ஜப்பான்
- அமெரிக்கா.
- போர்களை தவிர்த்தல்.
- சமூக பொருளாதார விஷயங்களில் பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது .
- 1926- ஜெர்மனி சங்கத்தில் சேர்ந்து; 1933 ஜெர்மனி சங்கத்தில் இருந்து விலகியது.
- 1934 ரஷ்யா சங்கத்தில் சேர்ந்து; 1939 ரஷ்யா வெளியேற்றப்பட்டது.
சங்கத்தின் செயல்பாடுகள்( 1920 முதல் 1925 வரை):
- ஜெர்மனி,
- பிரான்ஸ்
- பெல்ஜியம்
- இங்கிலாந்து
- இத்தாலி
- 1925இல் சங்கத்தின் பாதுகாப்புக்குழு ஆயுத குறைப்பு பிரச்சினை தொடர்பான மாநாடு ஒன்றைக் கூட்ட முயற்சித்தது.
- ஆனால் 1932 பிப்ரவரி மாநாடு கூடியது.
- பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நிகராக தானும் ஆயுதங்களை வைத்துக் கொள்ள அனுமதி கோரியது. பன்னாட்டு சங்கம் ஜெர்மனிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- 1931- ஜப்பான் மஞ்சூரி அவை தாக்கியது .
- ஜப்பான் சங்கத்தில் இருந்து வெளியேறியது.
- இத்தாலி எத்தியோப்பியா மீது போர் செய்தது
- 1937 இத்தாலி வெளியேறியது.
- ரஷ்யாவின் மீது போர் தொடுத்தது. 1939 இல் ரஷ்யா வெளியேற்றப்பட்டது 1946ல் பன்னாட்டு சங்கம் கலைக்கப்பட்டது.
- பன்னாட்டு சங்கம் முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளின் அமைப்பாகவே காணப்பட்டது.
- ராணுவம் இல்லை என்பதால் எடுத்த முடிவுகளை நடைமுறைப் படுத்த முடியவில்லை.
- கூட்டுப் பாதுகாப்பு நடைமுறை படுத்த முடியவில்லை .
- சர்வதிகாரி ஏற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி சங்கத்தின் ஆணைகளுக்கு கட்டுப்பட மறுத்தது .
- இங்கிலாந்து. பிரான்ஸ் மட்டுமே உறுதியாக இருந்தது.
- உட்ரோ வில்சன்- நாட்டையே ஒத்துக்கொள்ள செய்யமுடியவில்லை.