சட்டசபை தேர்தல் -வெற்றியில் தந்தையை மிஞ்சிய தனயன்..!!
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள, உதயநிதி ஸ்டாலினுக்கு, தன் தந்தைக்கு கிடைக்காத வாய்ப்பு கிடைத்து, முதல் தேர்தலிலேயே பெரும் வெற்றி பெற்றுள்ளார்.தேர்தலில் ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள, தி.மு.க.,வின் முக்கிய வேட்பாளர்களில் முக்கியமானவர்உதயநிதி ஸ்டாலின்.
இவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன்.தி.மு.க., வரலாற்றில், இளைஞரணி தலைவராக பணியாற்றிய ஸ்டாலின், 1984ல் முதன் முறையாக சட்டசபை தேர்தலில், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார்.
இந்த செய்தியையும் படிங்க…
கத்திரி வெயில்- மே 4ம் தேதி தொடக்கம்..!!
ஸ்டாலின் தன் முதல் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தன், 43வது வயதில் முதன்முதலாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று உள்ளார். முதல் முயற்சியிலேயே தந்தையை மிஞ்சி, உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.