கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதுதான்: மத்திய அரசு.
கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என செய்திகள் வெளியான நிலையில் அது பாதுகாப்பானதுதான் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோவிஷீல்ட் பயன்படுத்துவதால் ரத்தம் உறைவதாக வெளியான தகவல்களை மறுத்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், அதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் குறிப்பிட்டார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு ஊசிகள் இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டவை என ஐசிஎம்ஆரின்(ICMR) இயக்குநர் பல்ராம் பார்கவா கூறினார்.
இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் ஆற்றல் குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.