கோடைக் காலத்தில் -வெந்நீர் குடிக்கலாமா..??
அடிக்குற வெயிலுக்கு வெந்நீர் குடிப்பதா? என்று பலரும் கேட்கலாம். ஆனால், அனைத்து பருவ காலங்களிலும் நாள் ஒன்றுக்கு ஒரு சில தம்ளராவது வெந்நீர் அருந்துங்கள் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த செய்தியையும் படிங்க…
தைராய்டு இருப்பவர்களுக்கு -ஏற்படும் பாதிப்புகள் என்ன..??
- கோடைக் காலத்தில் குளிர்ச்சியான நீரை அருந்துவதைவிட வெந்நீரே சிறந்தது என்கின்றனர்.
- சாதாரணமாக கோடைக் காலத்தில் நாக்கு வறண்டு காணப்படும். எனவே, குளிர்ச்சியான பானங்களை நாக்கு தேடி ஓடும். இது வழக்கமான ஒன்று தான்.
- ஆனால் அப்படி நாக்கு வறண்டு இருக்கும்போது வெதுவெதுப்பான நீரையே அருந்த வேண்டும். எந்தவொரு பருவ காலங்களிலும் குளிர்ச்சியான நீரை அருந்துவதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
- நாக்கு அதிகமாக வறண்டு இருக்கும்போது வெதுவெதுப்பான நீரை அருந்துவது போல, மற்ற நேரங்களில் வெந்நீர் அருந்தலாம்.
- பகல் நேரங்களில் வெந்நீர் அருந்த முடியாதவர்கள், காலை எழுந்தவுடன் ஒரு தம்ளர் வெந்நீரும், அதேபோல இரவு தூங்குவதற்கு முன்னர் ஒரு தம்ளர் வெந்நீரும் அருந்துவது உடலியல் கோளாறுகளை நீக்கும்.
- கோடைக் காலத்தில் வெந்நீர் அருந்தக்கூடாது என்றில்லை. வெந்நீர் குடிப்பதால் உடல் வெப்பநிலை அதிகமாகும் என்பதும் உண்மையில்லை.
- கோடைக் காலத்தில் தாராளமாக வெந்நீர் அருந்தலாம்.
- சொல்லப்போனால், கோடையில் வெந்நீர் அருந்துவது உடல் வெப்பநிலையைக் குறைக்கும் என்றே கூறப்படுகிறது.