கொளத்தூர் தொகுதி: தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்..!!
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா தொற்று காரணமாக மாற்றம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கிய நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அத்தொகுதியில் புதிய தேர்தல் நடத்தும் அலுவலராக கண்ணன் என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க……
ஸ்டாலின் அமைச்சரவையில்- இந்த 3 சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம்..!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணும் பணியில் தொடர்புடையவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடப்படுகிறது.