“கொரோனா வைரசை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம்”-பிரதீப் கவுர்..!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3789 பேர் சென்னைவாசிகள். இன்று ஒரே நாளில் 1,13,144 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது. 7526 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 59 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.தமிழகத்தில் 10,37,711பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 13,317 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க….
உலக அளவில் பாதிப்பில் முதலிடம் தொட்ட இந்தியா.! – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது.!
இந்நிலையில் கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரசை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம். கொரோனா தொற்றுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டது.
மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட 3 கருவிகள் தான் நம்மிடம் உள்ளது. இதனை மட்டும் நம்புங்கள். நோய் எதிர்ப்பு சக்திதரும் என சத்துபொடி, பானங்களை நம்புவதை விட முகக்கவசத்தை நம்புங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.