கொரோனா முன்னெச்சரிக்கை. மின் வாரிய தேர்வுகள் ஒத்திவைப்பு..!!
கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிதீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினசரி உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
வேளச்சேரி வாக்குப்பதிவில் எதிரொலித்த -விவேக் மரணம்.!
இச்சூழலில் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரை நடைபெற இருந்த மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கணினி வழித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருவது கவனத்துக்குரியது.