கொரோனா பாதிப்பால்- இளம் நடிகர் உயிரிழப்பு !!
கன்னட மொழி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் டி.எஸ். மஞ்சுநாத். இவர் நடிப்பில் வெளியான கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா போன்ற படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்தார். தற்போது ஜீரோ பர்சன்ட் லவ் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து முடித்துள்ளார்.
வருகிற ஜூன் 22-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளில் அந்த படத்தை வெளியிட மஞ்சுநாத் திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா தடுப்பூசியை வீண் செய்ததில் தமிழகம் முதலிடம்- ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!
அதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. தொடர்ந்து அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் மஞ்சுநாத் உயிரிழந்தார். வெறும் 35 வயதான மஞ்சுநாத் உயிரிழந்துள்ளது கன்னட திரையுலகத்தினரை அச்சமடையச் செய்துள்ளது. அவருடைய மறைவுக்கு பல திரையுலகத்தினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.