கொரோனா பரவல்:9,10,11-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வுகள் நடத்தப்படாது – தமிழக அரசு அறிவிப்பு
2020 – 2021 கல்வியாண்டில் ஒன்பது, பத்து மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வித தேர்வுகளும் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் ஒன்பது, பத்து மற்றும் பதினொராம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஆனாலும் கூட மாணவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஒன்பது, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மார்ச் மாதத்திற்குள் தேர்வினை நடத்தி முடிக்க தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில், 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்த வேண்டாம் எனவும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் பள்ளிக் கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.