கொரோனா பரவல் தீவிரம்: கீழமை நீதிமன்றங்களில் -நேரடி மனுதாக்கல் செய்யக்கூடாது: கோர்ட் உத்தரவு..!! - Tamil Crowd (Health Care)

கொரோனா பரவல் தீவிரம்: கீழமை நீதிமன்றங்களில் -நேரடி மனுதாக்கல் செய்யக்கூடாது: கோர்ட் உத்தரவு..!!

 கொரோனா பரவல் தீவிரம்: கீழமை நீதிமன்றங்களில் -நேரடி மனுதாக்கல் செய்யக்கூடாது: கோர்ட் உத்தரவு..!!

 கொரோனா பரவலின் 2வது அலை அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது. நீதிபதிகள் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்து  வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அமர்வு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் ஆகியவை செயல்படுவதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

 கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனுத்தாக்கல் செய்யும் நடைமுறை முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. அதற்கு மாறாக நீதிமன்ற வளாகத்தின் வெளியே, காவல் நிலையம் அருகே வைக்கப்படும் பெட்டிகளில் மனுக்களை போட வேண்டும். நேரடி விசாரணைக்கு அவசியம் என்று விருப்பப்படும் வழக்குகளில் இரு தரப்பும் தேதியை முடிவு செய்து, அதற்கான கூடுதல் மனுவுடன் மூன்று நாட்களுக்கு முன்பாக தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை பரிசீலிக்கும் நீதிபதி, நேரடி விசாரணைக்கு அனுமதித்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு மட்டும் அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

 இந்த செய்தியையும் படிங்க..

அரசுப்பள்ளி மாணவிகள் -7 பேருக்கு கொரோனா.! 

சிபிஐ(CBI) மற்றும் எம்.பி(MP)., எம்.எல்.ஏ.(MLA) மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சல் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன் மூலமாக மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டும். ஜாமீன் மனுக்கள் அனைத்தும் காணொலி மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும். 

நீதிமன்ற அறையில் ஒரே சமயத்தில் 6 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி சீட்டு இல்லாமல் எவரும் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். உரிய அனுமதி சீட்டு கிடைத்தபின் உள்ளே அனுமதிப்படும் நபர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

Leave a Comment