கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் மருத்துவமனைகள்!
சென்னையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரசைவாக்கம், ஈவேரா சாலையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருக்கும் நோயாளிகளை மட்டுமே சில மருத்துவமனைகள் அனுமதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியையும் படிங்க….
கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தான ரெம்டிசிவிரை தொடர்ந்து டோசிலி ஊசி மருந்து கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையிலுள்ள பெரிய மருத்துவமனைகளில் கூட மருந்து இருப்பு தீர்ந்துவிட்டதால் மருத்துவர்கள் கவலை அடைந்துள்ளனர். மருந்து மற்றும் படுக்கை தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.