'கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே- முகவர்களுக்கு அனுமதி': தேர்தல் ஆணையம்..!! - Tamil Crowd (Health Care)

‘கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே- முகவர்களுக்கு அனுமதி’: தேர்தல் ஆணையம்..!!

 ‘கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே- முகவர்களுக்கு அனுமதி’: தேர்தல் ஆணையம்..!!

கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள், வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் மே 2 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று கட்டுப்பாடுகளை விதித்தது தேர்தல் ஆணையம்.

இந்த செய்தியையும் படிங்க….

 அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தியது ஏன்.? விளக்கம் வேணும்- தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

அதன்படி, வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா நெகடிவ் சான்று அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment