கொரோனா நிவாரணம்-முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்..!!
கொரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் இன்று முதல்- 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு..!!
இதையடுத்து திமுக அமோக வெற்றிபெற்று கடந்த7-ம் தேதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டத்துக்கு கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக இம்மாதம் ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2.07 கோடி பேருக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நண்பகல் நடைபெறுகிறது.
இதனிடையே கொரோனா நிவாரணத் தொகையை பெறுவதற்காக ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் குவிவதை தடுக்கும் நோக்கில் பணம் கொடுக்கப்படும் தேதி, நேரம் , உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ரூ.2,000 பணம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த செய்தியையும் படிங்க…
24ம் தேதி வரை- சார்பதிவாளர், ஆர்டிஓ(RDO) அலுவலகங்கள் இயங்காது: அரசு அறிவிப்பு..!!
மாவட்டந்தோறும் வட்ட அளவில் வரை ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிவாரணத் தொகை முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ரூ.2,000 பணத்தை நான்கு 500 ரூபாய் தாள்களாகவோ அல்லது ரூ.2,000 தாளாகவோ வெளிப்படையாக கொடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.