கொரோனா செய்திகளை ஊடகங்கள் எச்சரிக்கையுடன் வெளியிடுக-மு.க.ஸ்டாலின்..!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், செய்தி நிறுவனங்கள், காட்சி ஊடகங்கள் பணி முக்கியமானதாக உள்ளது. புதிய கட்டுப்பாடுகளுடன் முழு முடக்கம் அமலில் உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனாவில் இருந்து தப்புவது எப்படி? – புதிய பரிந்துரைகள்..!!
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. கொரோனாவில் இருந்து அனைத்து பணியாளர்களையும் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம். கொரோனா உள்ளிட்ட செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும். கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது. எதையும் மறைக்க கூடாது என அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் நான் கூறியுள்ளேன் என்றார்.
இந்த செய்தியையும் படிங்க…
ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்திய முறை.! உணவுக் கட்டுப்பாடு.!
மேலும், அரசின் செய்தியில் சந்தேகம் இருப்பின் விளக்கம் கேட்கலாம். அரசுக்கு ஆக்கபூர்வ ஆலோசனையை ஊடகங்கள் தெரிவிக்கலாம். செய்திகளில் கொரோனா விழிப்புணர்வு காட்சிப் பதிவுகளை வெளியிட வேண்டும். முகக் கவசம் அணியுமாறு தொலைக்காட்சியில் வலியுறுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.