கொரோனா சிகிச்சைக்கு- தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கை ஒதுக்க அரசு உத்தரவு..!!
தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கைகளை கொரோனா நோய் சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும்.
மேலும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், கொரோனா நோய்த்தொற்று சார்ந்த தினசரி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை தினமும் அரசு சமர்ப்பிக்க வேண்டும்.