கொரோனா கோரத்தாண்டவம்- இந்தியா மீண்டும் கிடுகிடு.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது:
கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் பிரேசில், அமெரிக்கா, மெக்ஸிகோவில் அதிகமாக உள்ளது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளில் உள்ளது போல் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. மக்கள் விழிப்புடன் செயல்படாவிட்டால் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சீனாவில் பரவ தொடங்கியகொரோனா தொற்றால் உலகில் இதுவரை 122,868,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,712,536 பேர் பலியாகி உள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து 99,024,163 பேர் இதுவரை மீண்டனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 21,131,456 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 30,423,853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 11,877,009 பேரும், இந்தியாவில் 11,554,895 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 4,437,938 பேரும், இங்கிலாந்தில் 4,285,684 பேரும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும்:
ஒரு நாள் அதிக பாதிப்பு உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் இருக்கிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 89,409 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் ஒரே நாளில் 64047 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3வது அதிகபாதிப்பு இந்தியாவில் தான் உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 40950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போலந்தில் 25,998 பேருக்கும், இத்தாலியில் 25,735 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 2,730 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,171 பேர் உயிரிழந்தனர். மெக்ஸிகோவில் 698 பேரும், ரஷ்யாவில் 443 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 189 பேர் பலியாகி உள்ளனர்.
உலகிலேயே கொரோனாவால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 554,007 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 290,525 பேரும், மெக்ஸிகோவில் 196,606 பேரும், இந்தியாவில் 159,594 பேரும், இங்கிலாந்தில் 126,026 பேரும் பலியாகி உள்ளனர்.