கொரோனாவை கட்டுப்படுத்த- இந்தியாவுக்கு உதவ தயார்: சீனா அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

கொரோனாவை கட்டுப்படுத்த- இந்தியாவுக்கு உதவ தயார்: சீனா அறிவிப்பு..!!

 கொரோனாவை கட்டுப்படுத்த- இந்தியாவுக்கு உதவ தயார்: சீனா அறிவிப்பு..!!

கொரோனா தொற்றின் மோசமான 2-வது அலையை இந்தியா எதிர்கொண்டு வருவதால், தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளையும், மருந்து வினியோகத்தையும் வழங்க தயாராக இருப்பதாக சீனா வியாழனன்று அறிவித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 பேர் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப் பட்டு உள்ளனர். 

கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை உலகில் பதிவான ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும். இந்நிலையில், இந்தியாவின் தொற்றுநோய் நிலைமை குறித்து சீன அரசு ஊடகம், அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த வாங் வென்பின், உதவ தயாராக இருக்கின்றோம் என்றார்.

மேலும் வாங் வென்பின் கூறியதாவது: 

கொரோனா தொற்றுநோய் மனிதகுலத்தின் பொது எதிரி. பெருந்தொற்றுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒருங்கிணைய வேண்டிய தேவை உள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் நிலைமை மோசமாக இருப்பதை சீனா கவனித்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பொருட்களுக்கு தற்காலிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

அதன் மூலம் அவர்கள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும். என கூறினார்.கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா பாதிப்பு மோசமாக இருந்த போது இந்தியா மருத்துவ பொருட்கள் வழங்கி உதவியிருக்கிறது. சுமார் 2 கோடி ரூபாய் செலவில் முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 15 டன் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த செய்தியையும் படிங்க….

 இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கரோனாவை -கோவாக்சின் திறம்பட எதிர்க்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்..!! 

 கடந்த ஆண்டு இந்தியாவில் முதல் அலை ஏற்பட்ட போது இந்த ஆதரவை சீனா இந்தியாவுக்கும் வழங்கியது. ஏப்ரலில் மருத்துவப் பொருட்களுடன் டஜன் கணக்கான விமானங்களை அனுப்பியது. தற்போது மீண்டும் உதவ தயார் என கூறியுள்ளது.

Leave a Comment