கொரோனாவிலிருந்து -எப்போது விடிவுகாலம் பிறக்கும்..?? - Tamil Crowd (Health Care)

கொரோனாவிலிருந்து -எப்போது விடிவுகாலம் பிறக்கும்..??

 கொரோனாவிலிருந்து -எப்போது விடிவுகாலம் பிறக்கும்..?? 

தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது. ஆனால் இப்போது 3 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

மிளகை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் !! 

இப்படி குறைவதால் ஆறுதல் பட எதுவுமில்லை என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலான மாநிலங்களில் பரிசோதனை அதிகப்படுத்தவில்லை என்பதால் குறைவான பாதிப்பு எண்ணிக்கை வருவதாகக் கூறுகிறார்கள். தொற்று குறைவதைச் சாதகமாகப் பயன்படுத்தி கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது என்கின்றனர்.

கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்ற ஏக்கம் மக்களிடையே எழுந்திருக்கிறது. அதற்கு உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் பதிலளித்துள்ளார். தனியார் ஊடக நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், “இப்போது நாம் கடினமான காலகட்டத்தில் இருக்கிறோம். வைரஸ் எவ்வளவு காலம்இன்னும் இருக்கப் போகிறது என்பதைக் கணிப்பது கடினமான ஒன்றாகும். உலக மக்கள் தொகையில் 30 சதவீத மக்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி போட்டுவிட்டால், நோயின் தீவிரத் தன்மையிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

2022ஆம் ஆண்டில் 60 முதல் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் இறப்புகள் வெகுவாகக் குறையும். மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால், வைரஸின் தாக்கம் குறையும் என்பது பற்றி இன்னும் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை. 

இந்த செய்தியையும் படிங்க…

காலையிலே இந்த பாலை குடிச்சா -கால் வலி வராது..!! 

இருப்பினும் அடுத்த 6 முதல் 18 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. எவ்வளவு வேகமாக தடுப்பூசி செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே, பொருளாதார வளர்ச்சி சகஜ நிலைக்கு திரும்புவதும் அடங்கியிருக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட தடைகள் இருந்தாலும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பது அவசியம்” என்றார்.

Leave a Comment