கொரோனாவால் தள்ளாடும் இந்தியா- உலக சுகாதார அமைப்பு வேதனை..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க….
18 நண்பர்களே.. கொரோனா தடுப்பூசி-‘CoWIN’ ஆப்-ல் ரெஜிஸ்டர் செய்வது எப்படி தெரியுமா?
கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட உலக நாடுகளும் முன்வந்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- இந்தியாவில் நிலவும் சூழல் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. முக்கிய கருவிகள் வழங்குதல் உள்பட உலக சுகாதார அமைப்பால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்றார்.