கொரோனாவால் சீத்தாராம் யெச்சூரியின் மகன் மரணம் : ஸ்டாலின் இரங்கல்..!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க
10 – ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை..!!
இது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 22) சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை என்னுடைய மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியை கொரோனா தொற்றுக்கு பறிகொடுத்துவிட்டேன் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அனைவருக்கும், என் மகனுக்கு சிகிச்சையளித்த் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.