கொடைக்கானலில் JULY-5 முதல் பூங்காக்கள் திறப்பு..!!
கொடைக்கானலில் இன்று முதல்
பிரையண்ட் பூங்கா,
ரோஸ் கார்டன்,
செட்டியார் பூங்காவை
சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, கொடைக்கானலில் கடந்த 2 மாதத் துக்கு மேலாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்களை படிப்படி யாகத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
வழிபாட்டுத்தலங்கள் JULY -5 திறப்பு-இதற்கெல்லாம் தடை: பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!!
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சீனி வாசன் கூறியதாவது:
பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகி யவை இன்று முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார் வைக்கு அனுமதிக்கப்பட உள்ளன.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து அரசு வழிகாட்டுதலின்படி 50 சதவீத சுற்றுலாப் பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
- சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்ப பரி சோதனை கட்டாயம்.
- முகக் கவசம்,
- தனிமனித இடை வெளியை கடைப் பிடிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.