கேரளா செல்ல இ-பாஸ் கட்டாயம்; எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்..!! - Tamil Crowd (Health Care)

கேரளா செல்ல இ-பாஸ் கட்டாயம்; எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்..!!

 கேரளா செல்ல இ-பாஸ் கட்டாயம்; எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்..!!

தமிழகத்தில் இருந்து கேரளா வருவோருக்கு நேற்று முதல் இ-பாஸ் நடைமுறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரப் படுத்தப்பட்டது.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், நோய் தடுப்பு நடவடிக்கையாக திருணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு முன் அனுமதிபெற உத்தரவிட்டுள்ள கேரள அரசு, தமிழகத்தில் இருந்து வருவோருக்கு நேற்று திங்கள் கிழமை முதல் இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவித்து இருந்தது.

இந்த செய்தியையும் படிங்க…

டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்..?? 

மேலும், கேரளாவில் இருந்து கோவைக்கு சென்று வருபவர்கள் 48 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது. இதன்படி, நேற்று காலை முதல் கோவை மாவட்ட எல்லையில் உள்ள வளையாறு, வேலந்தாவலம் உள்பட 13 சோதனை சாவடிகளும் மூடப்பட்டு, அந்த மாநில சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழகத்தில் இருந்து இ-பாஸ் பெறாமல் வந்த பயணிகளுக்கு, முதல் நாள் என்பதால் அங்குள்ள சோதனைச் சாவடிகள் மூலம் இ-பாஸ் பதிவுசெய்து அனுப்பி வைத்தனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு சோதனைச் சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் வரும் நாட்களில் இ-பாஸ் பெறாமல் வரும் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment