கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது தமிழகம்
கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:
கேரளாவில் COVID-19 தொற்று பாதிப்புகள் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி, கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் வலையாரில் கேரள எல்லையில் வாகனங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து பயணிகளின் உடல் வெப்பநிலையையும் ஆய்வு செய்துள்ளனர்.
72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி பி.சி.ஆர் (RTPCR)சோதனை சான்றிதழ்களை வழங்க வேண்டும் தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ள போதிலும், சுகாதார அதிகாரிகளும் காவல்துறையினரும் இதை வலியுறுத்தவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து மீது எந்த தடையும் இல்லை.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கே.ராஜமணி-கடிதம்:
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கே.ராஜமணி பாலக்காடு மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மற்ற மாநிலங்களில் இருந்து (கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி தவிர) வரும் அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கும் தமிழ்நாட்டின் e-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கு பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகடிவ் COVID-19 RT-PCR அறிக்கையை எடுத்துச் செல்ல வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு இது தொடர்பாக கடிதம் வந்துள்ளதாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் மெஹர் அலி தெரிவித்தார்.