குழந்தைகளை பாதிக்கும்- புதிய கொரோனா வைரஸ் திரிபு ..!! - Tamil Crowd (Health Care)

குழந்தைகளை பாதிக்கும்- புதிய கொரோனா வைரஸ் திரிபு ..!!

 குழந்தைகளை பாதிக்கும்- புதிய கொரோனா வைரஸ் திரிபு ..!!

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும்  அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளையர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்திய முறை.! உணவுக் கட்டுப்பாடு.! 

அனைத்து ஆரம்ப, உயர்நிலை, ஜூனியர் கல்லூரிகள் (மே 19) முதல் மே 28ஆம் தேதி வரை மூடப்படும் என அந்நாட்டுக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இத்தகைய வைரஸ் திரிபுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், யாருக்கும் கவலைப்படத்தக்க பாதிப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா  தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்த புதிய வகை கொரோனா திரிபு குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதாக கருதப்படுகிறது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

“தற்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் சில உருமாறிய திரிபுகள் வேகமாகப் பரவுகின்றன. அவை குழந்தைகளை அதிகம் தாக்குவதாகக் கூறப்படுவதால் அடுத்து வரும் நாட்களில் நமது நடமாட்டத்தையும் ஒன்றுகூடுதல்களையும் கணிசமான அளவு குறைத்துக்கொள்ள வேண்டும்,” என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

கவலை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் திரிபுகள்:

கொரோனா வைரஸ் திரிபுகள் வேகமாக பரவக்கூடியவை என்பதும் குழந்தைகளை அதிகம் தாக்கக்கூடியவை என்பதும் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த அறிவிப்பு வரும் வரை பெரும்பாலான கற்றல் நடவடிக்கைகளை இணையம் வழி செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த செய்தியையும் படிங்க…

மிளகை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் !! 

ஃபைசர், பயோ என்டெக் நிறுவன தடுப்பூசிகள்தான் அந்த வயதினருக்கு செலுத்தப்படும் என்றார் அவர். சிங்கப்பூர் அறிவியல் ஆணையம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு கோவிட் தடுப்பூசிகள் தொடர்பான நிபுணர் குழு ஆதரவளித்துள்ளதாக அமைச்சர் ஓங் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment