குடும்பத்தில் யாரெல்லாம் ரேசன் கடையில் கொரோனா நிவாரண நிதியை பெறலாம்..?? - Tamil Crowd (Health Care)

குடும்பத்தில் யாரெல்லாம் ரேசன் கடையில் கொரோனா நிவாரண நிதியை பெறலாம்..??

 குடும்பத்தில் யாரெல்லாம் ரேசன் கடையில் கொரோனா நிவாரண நிதியை பெறலாம்..??

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போதே அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி அக்கட்சி வெற்றிபெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது.

இந்த செய்தியையும் படிங்க…

 மத்திய அரசு வேலைவாய்ப்பு.! மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்.! 

முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே கொரோனா நிவாரண நிதிக்கு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் என்பன உள்ளிட்ட 5 முக்கியக் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவரும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நிவாரணத் தொகையாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று (ஏப்.10) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கூட்டத்தைத் தவிர்க்க இதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி 3 நாட்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 15ஆம் தேதி முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2,000 வழங்கும் பணி தொடங்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் யாரும் ரேசன் கடைக்கு சென்று நிதியை பெற்றுக்கொள்ளலாம். கொரோனா நிவாரண நிதியை அந்தந்த ரேஷன் கடைகளில் மட்டுமே வாங்க முடியும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

இந்த செய்தியையும் படிங்க…

 டிகிரி முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில்-மத்திய அரசு வேலை..!! 

அரிசி அட்டை வைத்துள்ள சுமார் 2.07 கோடி பேருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும். அட்டைதாரரின் குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் ரேஷன் கடைக்குச் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்தப் பணம் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 200 அட்டைதாரர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் பணத்தைச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

Leave a Comment