காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு- வெளியீடு.!
தமிழக காவல் துறையில் 969 காவல் உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்யும் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி 969 காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல் தகுதித்தேர்வு, உடல்திறன் போட்டி, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை படிப்படியாக நடத்தி முடிக்கப்பட்டன.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இறுதியில் மருத்துவத் தேர்வு, குணநலன்கள் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்களுக்குத் தேர்வுஆகியவற்றில் 969 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் www.tnusrbonline.org என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.