காற்றில் பரவும் தன்மை கொரோனாவுக்கு உள்ளது – லான்செட் இதழில் தகவல்!
காற்றில் பரவும் தன்மை கொரோனாவுக்கு உள்ளது என மருத்துவ இதழான லான்செட்டில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தற்பொழுது மீண்டும் தனது வீரியத்தை அதிகரித்து இருக்கும் நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்ட புதிய ஆய்வுக்கான தகவல் ஒன்று தற்பொழுது மருத்துவ இதழாகிய லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கொரோனா தீவிரமாகாது!
அதன்படி கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை உடையது, ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் காற்றில் பரவுவதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அறைக்குள் இருக்கும் காற்றில் இது அதிகமாக பரவுவதில்லை எனவும், பொது வெளியில் உள்ள காற்றில் தான் அதிகம் இந்த வைரஸ் பரவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் புதிய முன்னெச்சரிக்கைகள் மேற்கொண்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.