காய்களில் உள்ள -மருத்துவ குணம்..!!
இன்றைய காலகட்டத்தில் உணவு முறைகள் முக்கியமானதாகும், நம் வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்து உடலில் உள்ள நோய்களை சரிசெய்யலாம்.
பீட்ருட் :
பீட்ருட் உடன் சர்க்கரையோ அல்லது செய்ற்கை சுவையூட்டிகளோ சேர்க்காமல் சிறிதாக நறுக்கி அதை சாறாக பிழிந்து ஒருவாரம் குடித்து வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
உடல் எடையை சமநிலைப்படுத்துகிறது.
பொட்டாசியத்தில் அளவை அதிக்க உதவுகிறது.
புற்று நோய் வராமலும் பாதுகாக்கிறது.
முருங்கைக்காய்:
முருங்கைக்காயை வாரத்தில் இரு முறை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன.
வாய்ப்புண் வராதபடி காக்கிறது.
முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியை போக்கிறது.
செவ்வாழை:
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும்.
முந்தரி பருப்பு:
தினசரி சிறிதளவு முந்தரி பருப்பு சாப்பிட்டுவதால் ரத்த அழுத்தம் சீராகும், சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கலாம்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, கிராம்பு, துளசி, பீன்ஸ், கேரட், புரோகோலி, காபிபிளவர், கொத்தமல்லி, தக்காளி இவற்றை தேவையான அளவு எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளவு. பின் வாணிலியில் சிறிது உப்பு சேர்த்து லேசாக வறுத்து தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். இவை நன்றாக கொதிக்க மசியும் தரிவாயில் இறக்கி விட வேண்டும். தற்போது சுவையான, ஆரோக்கியமான வெஜ்சூப் ரெடி.