கல்வி, வேலை வாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடு- சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு உத்தரவு..!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மசோதா நிறைவேறியது.
இந்த செய்தியையும் படிங்க…
இது குறித்து உயர்கல்வித்துறை துணை செயலாளர் மோகன்ராமன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பிப்ரவரி 26ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட 2021ம் ஆண்டு சட்டம் ‘8’ன் படி அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மிகவும் பிற்பட்டோர் வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அந்த அறிவிப்பை அடுத்து மேற்கண்ட உயர்கல்வி நிறுவனங்களில் மேற்குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.