கல்வி சார்ந்த WhatsApp குழுக்கள் கண்காணிக்க – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!!
அரசு பள்ளிகளின் கல்வி சார்ந்த கட்செவி அஞ்சல் (Whatsapp) குழுக்களை அதன் தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் கல்வி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
WBC அதிகப்படுத்தி, நோய்த்தொற்றில் இருந்து நுரையீரலை காக்க..!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு WhatsApp உள்ளிட்ட செயலிகள் வழியாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். சில மாவட்டங்களில் தேர்வுகளும் நடத்தப் படுகின்றன. அத்தகைய கல்வி சார்ந்த WhatsApp குழுக்களில் பாடம் தவிர்த்து இதர கருத்துக்களை பகிர கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் ஆசிரியர்கள் WhatsApp குழுக்களில் தேவையற்ற கருத்துக்களை பதிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் ஒவ்வொரு WhatsApp குழுக்களில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியை அல்லது பெற்றோர் சங்க பிரதிநிதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த குழுக்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியமாகும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.