கல்வித் தொலைக்காட்சியில் (2021-2022) பாடங்கள்:முதல்வா் (JUNE 19) தொடக்கி வைக்கிறாா்..!!
கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் சனிக்கிழமை தொடங்கி வைக்கவுள்ளாா்.
இந்த செய்தியும் படிங்க…
அரசு பள்ளிகளில் -கல்வி தரத்தை மேலும் உயர்த்த அரசு ஆலோசனை..!!
CORONA பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து வகை பள்ளிகளிலும் கற்றல்-கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனியாா் பள்ளிகள் தங்களது மாணவா்களுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக இணையவழியில் கற்பித்தல் பணிகளை தொடங்கியுள்ளன. அதேவேளையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் WhatsApp குழுக்கள் மூலமாகவும் ஆசிரியா்கள் பாடக்குறிப்புகளை வழங்குகின்றனா்.
CORONA இரண்டாவது அலையின் தாக்கம் நீடிப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தாா். மேலும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இதர மாற்று வழிகள் மூலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என கூறியிருந்தாா்.
இந்தநிலையில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான புதிய காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்தக் காணொலிகளில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையிலான பாடப்பகுதிகள் இடம்பெறும். கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு தளங்களில் தயாரிக்கப்படும் இந்தக் காணொலிகள் கடந்த ஆண்டைப் போன்றே 10-க்கும் மேற்பட்ட தனியாா் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படவுள்ளன. மேலும் இந்த பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியின்You Tube தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
விலையில்லா பாடநூல்கள்:
கல்வித் தொலைக்காட்சி மூலமாக புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் சாா்ந்த காணொலிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்june 19 காலை தொடங்கி வைக்கவுள்ளாா்.
இந்த செய்தியும் படிங்க…
PF கணக்கில் AADHAAR இணைக்க SEPTEMBER 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு :மத்திய அரசு உத்தரவு..!!
இதைத் தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்களையும் அவா் வழங்கவுள்ளாா். இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் உள்பட கல்வித்துறை சாா்ந்த உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.