கற்போம்.! எழுதுவோம்.! இயக்கம் – கல்வி சார் பாடங்கள் இனி கல்வித் தொலைக்காட்சியில்..!!
தமிழகத்தில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3,10,000 கல்லாதோருக்கு நடப்பு 2020-21 ஆம் ஆண்டிற்குள் அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், கற்போம் எழுதவோம் இயக்கம் (Pradhan Lakhani Abhiyan) மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க….
மே 1ஆம் தேதி முதல் – அரசு அதிரடி அறிவிப்பு..!!
இம்மையங்களில் தன்னார்வ ஆசிரியர்களின் உதவியுடன், கற்போருக்கான பயிற்சிக் கட்டகத்தைக் கொண்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் தொடந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது, அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை தொடர்ந்து இக்கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை மேலும் மெருகூட்டும் வகையிலும், கற்போர் பயிற்சிக் கட்டகத்திலுள்ள தமிழ் மற்றும் கணித பாடக்கருத்துக்கள் ஒலி மற்றும் ஒளி வடிவில் இவ்வியக்ககத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியையும் படிங்க….
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்-ஸ்டெர்லைட்: ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் அனுமதி..!!
இதன் தொடர்ச்சியாக, கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் பயின்று வரும் கற்போர்கள் தொடர்ந்து பயன் பெறும் வகையில், முன் குறிப்பிடப்பட்டுள்ளபடி தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை எழுத்தறிவுக் கல்வி சார்ந்த பாடங்கள், 26.04.2021 அன்று முதல் கல்வித் தொலைக்காட்சியில் மாலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை தினந்தோறும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.